Sheikhagar.org - Official site for sheikhagar

சமுக ஒற்றுமை - இப்தார் சிந்தனை (வாமி)

Created On: Wednesday, 01 July 2015 16:54

 

audio Download Here

 

இஸ்லாமிய நோக்கில், சமநிலைக் கொள்கை

Created On: Saturday, 27 June 2015 19:23

-நாகூர் ழரீஃப்-

கத்தாரில் (22-06-2015) ஆரம்பமான மேற்படி கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்ட அஷ்ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

இத்தகைய கருத்தரங்குகளின் மூலம் சமூகத்தில் சிந்தனைத் தெளிவு பிறக்கின்றது. அதன் ஊடாக எமது இலக்கை அடைந்து கொள்ள முடியும்.

நாம் ஏற்றிருக்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றை நோக்குவதன் மூலம் அதன் வாழ்வியல் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். அவை :

01- தெய்வீகமானது

02- உலகளாவியது

03- நடைமுறைச் சாத்தியமானது

04- முழுமை பெற்றது

05- நிலையான தன்மையும் மாறும் தன்மையும் கொண்டது

06- நடுநிலையானது.

மேற்சொல்லப்பட்ட தனிச்சிறப்புக்களின் அடியில் பார்க்கும் பொழுது எமக்கு மயக்கமாக தென்படும் பல விடயங்கள் மிகத் தெளிவாகப் புலப்படும்.

இஸ்லாம் இறைவனிடம் இருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றது. அதுபோன்று அவனிடத்தில் எம்மைக் கொண்டும் இணைக்கும் வல்லமையும் கொண்டது. இது மனித சிந்தனையில் தோன்றிய ஒன்றல்ல என்பதனால் மனித வாழ்வின் இலக்கை அது தெளிவுபடுத்தி நிற்கின்றது.

மனித சிந்தனைகள் தோற்றுவித்துள்ள கோட்பாடுகள் படு தோல்வியடைந்தமைக்கான அடிப்படைக் காரணிகள் ஒன்று அது தெய்வீகமானதாக அமையாமையே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அடிப்படையான மூல நம்பிக்கை மற்றும் வணக்க முறைகள் சார் கோட்பாடுகள் தவிர்ந்த, இஜ்திஹாதுக்கு உட்பட்ட அம்சங்களில் விரிந்து கொடுக்கும் தன்மை கொடுக்கப்பட்டமையானது நவீனகாலத்துக்கும் ஒத்துப் போகும் சன்மார்க்கம் என்ற உண்மையை பரைசாற்றுகின்றது எனலாம்.

அத்துடன் சமகால உலக நிலையை நோக்கும் பொழுது தீவிரவாதம், தாராண்மை வாதம், மதத் தீவிரவாதம், மதத்தாராண்மை வாதம், மத எதிர்ப்புத் தீவிரவாதம் போன்றவற்றிக்கிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இஸ்லாம் இவற்றிற்கிடையில் சமநிலை அல்லது நடுநிலை என்ற சிறப்பான கோட்பாட்டின் ஊடாக இரு துருவங்களுக்கு இடைப்பட்ட நிலையை உருவாக்கி தீவிரத்துக்கும் பொடுபோக்கிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையை வழங்கிநிற்கின்றமை அதன் சிறப்பியல்பாகும்.

மத்தியஸ்தம் வகித்தல், சீராக்கல், நேராக்கல் எனும் தன்மையைக் கொண்டுள்ளதால்; எக்கோட்பாடுகளினாலும் தீர்க்கமுடியாத சவால்களை இஸ்லாத்தினால் தீர்க்கமுடிகின்றது.

நடுநிலைக் கொள்கையில் நலவுகளும், பாதுகாப்புத் தன்மையும் பலமும் கிடைக்கப் பெறுவதுடன் ஒற்றுமையின் மையப்புள்ளியாகவும் அமைகின்றது.

 

இப்தார் சிந்தனை - 01

Created On: Friday, 19 June 2015 21:15

 

audio Download Here

   

நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை - 2

Created On: Tuesday, 09 June 2015 19:58

பகுதி- 02

அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இவர்கள் அறிவூட்டப்பட வேண்டும். இவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் விதிவிலக்கில்லாமல் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர், யுவதிகளை சரியான பாதையில் வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பிருக்கிறது. இதற்காக பாடநெறி உருவாக்கப்பட வேண்டும். உரைகள் மாத்திரம் போதாது. தரமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கூடாக இளைஞர், யுவதிகள் கட்டம் கட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் ஐந்து பேரில் ஒருவர் 60 வயதைக் கடந்த வயோதிபர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. இலங்கையிலுள்ள ஐந்து பேரில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்தாக National Institute of Mantel Health  விடுத்துள்ள அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இது ஒரு சாதாரண விடயமல்ல.

எமது நாட்டில் வருடாந்தம் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது மன அழுத்தத்தின் உச்ச நிலை.

 

Read more..

 

நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை

Created On: Tuesday, 19 May 2015 17:32

தொழுகை,நோன்பு, ஸகாத், ஹஜ் இவையெல்லம் (இபாதத்) கட்டாயக் கடமை என்பது எமக்குத் தெரியும்.ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது, தொழுவிப்பது, நல்லடக்கம் செய்வதும் இபாதத் என்பதை புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், திருமணமும் ஓர் இபாதத் என்பதை நாம் எந்தளவு தூரம் புரிந்து வைத்திருக்கின்றோம்? என்ற கேள்வியை நாம் அடிக்கடி எழுப்புவதுண்டு. பலபோது திருமணத்தை, திருமணத்தோடு தொடர்புபட்ட விடயங்களை, குடும்ப வாழ்க்கையை, குடும்ப வாழ்க்கையோடு தொடர்புபட்ட விடயங்களை இபாதத்தாக பார்க்கத் தவறி விடுகின்றோம். ஆனால், உண்மை என்னவெனில், திருமணம் என்பதும் ஓர் அமல், இபாதத்ளூ குடும்ப வாழ்க்கை என்பதும் ஓர் அமல், இபாதத். கணவன் மனைவிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, மனைவி கணவனுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, பெற்றோர் பிள்ளைகளுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, பிள்ளைகள் பெற்றோருக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது... இவ்வாறு குடும்ப வாழ்க்கையோடு தொடர்பான அனைத்தும் அம்சங்களும் இபாதத்களாக, நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய செயல்களாக எமது மார்க்கத்தில் கொள்ளப்படுகின்றன என்ற செய்தியை எமது சமூகத்துக்கு அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது என நான் கருதுகின்றேன்.

நிகாஹைப் பொறுத்தவரை இரு தரப்பினர் சம்பந்தப்படுகின்றனர். மணமகன் தரப்பு, மணமகள் தரப்பு. ஆண் தரப்பு,பெண் தரப்பு என்றும் சொல்லலாம். ஆனால், எல்லா விடயங்களிலும் போல் இங்கும் ஆண் தரப்பினரே செல்வாக்குச் செலுத்துவதை பார்க்கிறோம். நிகாஹ் மஜ்லிஸிலே கலந்து கொள்பவர்கள் ஆண்கள்ளூ ஈஜாப்-கபூலிலே வலி, ஷாஹித் என ஆண்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதையே பார்க்கிறோம். இதில் பெண்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

Read more..

   

Page 1 of 47

<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

We have 16 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player