குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் வகிபங்கு

 

உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் குழந்தைகளை ஸீனத் என்று வர்ணிக்கின்றான்.

"செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்."

(ஸூரதுல் கஃப்: 46)

குழந்தைகள் இந்த உலகத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற ஒரு  நிஃமத் (அருட்கொடை) என்றும் அல்லகுர்ஆன் குறிப்பிடுகின்றது.


"ஏராளமான பொருள்களையும் புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்." (ஸூரதுல் இஸ்ரா: 06)

கண்களுக்கு குளிர்ச்சியானவர்கள் (குர்ரதுல் அஃயுன்) என்றும் அல்குர்ஆன் குழந்தைகளை வர்ணிக்கிறது.

"மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரி டமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!"

(ஸூரதுல்புர்கான்: 74)

அருளாக அமைகின்ற ஒவ்வொன்றும் அமானத். சொத்து, செல்வங்கள்  அல்லாஹ்வின் அருட்கொடைகள். அவை அமானிதமும்கூட. தேக ஆரோக் கியம் ஓர் அருளாக இருப்பது போல் அது ஓர் அமானிதமுமாகும். இளமைப் பருவம் ஓர் அருள். அவ்வாறே அது ஓர் அமானிதம். அந்த வகையில் அருளாக விளங்கும் குழந்தைகள் மிகப் பெரும் பாக்கியமும் அமானிதமுமாகும்.

இவ்வாறு குழந்தைகளை அருளாக, அலங்காரமாக, செல்வமாக, பாக்கிய மாக, கண்குளிர்ச்சியாக, பரிசாக வர்ணிக்கின்ற அல்குர்ஆன் குழந்தைகள் சோதனையுமாகும் என்ற உண்மையையும் சொல்கிறது.

"நிச்சயமாக உங்கள் செல்வமும் உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோத னை யாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்."   (ஸூரதுல் அன்பால்: 28)

குழந்தைகள் அலங்காரப் பொருட்களாக (ஸீனா) அமையலாம். அவர்கள் பித்னாவாகவும் மாறலாம். அது பெற்றோ ரின் கரங்களில்தான் தங்கியிருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குழந்தைச் செல்வத்தை அருளிவிட்டு இப்படிச் சொல்கின்றான்:
"அல்லாஹ் உங்களுடைய குழந்தைகள் விடயத்தில் உங்களுக்கு வஸிய்யத் செய்கிறான்."

அருளாகக் கிடைக்கப்பெற்ற எமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டிய உரிமைகள், கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறினால் இவர்கள் எமக்கு இம்மையிலும் மறுமையிலும் கண்குளிர்ச்சியாக இருப்பதற்குப் பகரமாக பித்னா வாக மாறுவார்கள்.

ஒரு தடைவ நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொ றுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக் கப்படுவார்."        (ஆதாரம்: அல்புகாரி, முஸ்லிம், அபூதாவுத், அத்திர்மதி)

இந்த ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொல்கின்ற பொறுப் புணர்வு எப்போதும் எமது உள்ளத்தில் மிக ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:
மறுமை நாளில், மஹ்ஷர் வெளியில் ஒருவர் விசாரிக்கப்படுவதற்கு முன்னர் அந்த குறித்த நபரின் பெற்றோ ர் விசாரிக்கப்படுவர். அதிகமானோர் தோல் வியடைவதற்குக் காரணம், அவர்களுடைய பெற்றோ ரே. அந்த வகையில் பெற்றோ ர் தமது பிள்ளைகளுக்கு வகை கூற வேண்டும்.

"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்."                              (ஸூரதுத் தஹ்ரீம்: 06)

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது இலகு. ஆனால், அவர்களை வளர்த் தெடுப்பதுதான் எமக்கு முன்னாலுள்ள மிகப் பொறுப்பான ஒரு காரியம்.

பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

01. அழகிய பெயரைச் சூட்டுதல்:


குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள, அழகியப் பெயர்களைச் சூட்ட வேண் டிய கடமை பெற்றோ ரைச் சாரும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்:

"கியாமத்தில் நீங்கள் உங்களுடைய பெயர்களைக் கொண்டும் உங்களு டைய பெற்றோ ர்களின் பெயரைக் கொண்டுமே அழைக்கப்படுவீர்கள். எனவே அழகிய முறையில் பெயர்களைச் சூட்டுங்கள்."

நபியவர்கள் அழகிய பெயர்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

"உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல் லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்."               (ஸஹீஹுல் முஸ்லிம்)

இன்று இத்தகைய பெயர்கள் பரவலாக சூட்டப்பட்டிருந்தாலும், எமது சமூகத்தில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கே இவ்விரு பெயர்களும் அதிகமதிகம் சூட்டப்படுகின்றமை கவலைக்குரியது.

இன்று பலர் தமது பிள்ளைகளுக்கு நவீன ஸ்டைலில் பெயர் சூட்டுகிறார்கள். நாகரிகமான பெயர்கள் எனக் கூறி அர்த்தமற்ற பெயர்களைச் சூட்டுகிறார் கள். சிலபோது மோசமான அர்த்தங்களுடைய பெயர்களைச் சூட்டிவிடு கிறார்கள்.

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். மோசமான அர்த்தம் பொதிந்த பெயர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அழகிய பெயர்களாக மாற்றுபவர்களாக இருந்தார்கள்.          (அத்திர்மிதி)

ஆஸியா (ஹூஹகூஜூ) பாவி எனும் அர்த்தம் பொதிந்த ஒரு பெண்ணின் பெயரை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஜமீலா அழகானவள் என்று மாற்றியமைத்தார்கள். (ஆதாரம்: முஸ்லிம், இப்னு மாஜா)

ஒரு தடைவ நபியவர்கள் ஒரு நபித் தோழரின் பெயரை வினவுகிறார்கள். அப்போது அவர் ஹர்ப் எனச் சொன்னார். போர் என்ற அர்த்தம் பொதிந்த அந்தப் பெயரை நபியவர்கள் மாற்றியமைத்தார்கள். மற்றோ ரு நபித்தோழரின் பெயர் ஹஸ்ன் என்பதை அறிந்த நபியவர்கள் கவலை எனும் அர்த்தம் கொண்ட அந்தப் பெயரை மாற்றியமைத்தார்கள்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களுடன் (அஸ்மாஉல் ஹுஸ்னா) அடியான் (அப்து) என்பதை சேர்த்து வைக்க முடியும். அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அப்துஸ் ஸமத் அப்துல் காலிக், அப்துல் பாரி, அப்துர் ரஊப் ஆகிய பெயர்கள் மிகவும் உன்னதமான பெயர்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்:

"நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு ஆதம், யஃகூப், இஸ்மாஈல், இப்றாஹீம், ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) என்று நபிமார்களுடைய பெயர்களைச் சூட்டுங்கள்."
அபூ மூஸா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொண்டு சென்றேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அக்குழந்தைக்கு இப்ராஹீம் எனப் பெயர் சூட்டிப் பேரீத்தம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவி னார்கள்.                                                                                         (முஸ்லிம்)
அபூ ஹனீபா, மாலிக், அஹ்மத், ஷாபிஈ இப்படி ஆயிரமாயிரம் இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்கள் வரலாற்றில் தோன்றியிருக் கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சூட்ட முடியும்.

மோசமான பொருள் கொண்ட பெயர்கள், பொருள் இல்லாத பெயர்கள், நடிக, நடிகைகளின் பெயர்கள், விளையாட்டு வீர, வீராங்கணைகளின் பெயர் கள், கலைஞர்களின் பெயர்கள், முஸ்லிம் பெயராக அடையாளம் காணப்படக் கூடாது எனும் நோக்கில் சூட்டப்படும் பெயர்கள் என்று பல காரணங்களுக் காக பெயர் சூட்டப்படுகின்றன.

எனவே, குழந்தைகளுக்கு பெயர்களைத் தெரிவு செய்வதில் அமானிதத்துடன் நடந்து கொள்வது எமது கடமை.

02. அகீகா கொடுத்தல்


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்:

"ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும் அந்தக் குழந்தைக்கு கொடுக்கப்படு கின்ற அகீகாவில் தங்கியிருக்கின்றது."

இன்று குழந்தையின் முதலாவது பிறந்த நாளைக் (டீசைவானயல) கொண்டா டுவதில் கரிசனை காட்டுகின்றவர்கள் தமது குழந்தையின் அகீகா விடயத்தில் பலபோது கரிசனை காட்டுவதில்லை.

ஆண் குழந்தையாயின் உரிய வயதில் கத்னாவை நிறைவேற்றுவது பெற்றோ  ரின் பொறுப்பு. இது எல்லா நபிமார்களும் பின்பற்றிய ஒரு முக்கியமான ஸுன்னா. பிக்ஹ் கண்ணோட்டத்தில் கத்னா செய்வது வாஜிபாகக் கருதப்ப டுகின்றது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: விருத் தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவர்க் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்." (அல்புகாரி)

03.  ஈமானிய உணர்வை விதைத்தல்


இஸ்லாத்தின் அடிப்படையான லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் ஆழமா கப் பதிக்க முயற்சிப்பது ஒவ்வோரு பெற்றோ ரினதும் தலையாய கடமை யாகும். ஆராட்டும்போதும் தாலாட்டும்போதும் கலிமாவை மொழிந்து, அவர்களது ஆழ்மனதில் அதனைப் பதிய வைக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அவன் எம் அனைவரையும் பார்த்துக் கொண்டி ருக்கின்றான் என்பதனை எமது குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களுக்கு ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (அனுமதிக்கப்படாததது) பற்றியும் சரி எது, பிழை எது என்பiயும் முறையாக தெளிவுபடுத்த வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொன்னார்கள்:
"உங்களது குழந்தைகளுக்கு அல்லாஹ்வுடைய கட்டளைகளைப் பின் பற்றி நடக்குமாறு ஏவுங்கள். அவனது விலக்கியவற்றைத் தவிர்ந்து நடக்கு மாறு ஏவுங்கள். அது அவர்களையும் உங்களையும் நரக நெருப்பிலிருந்து காப் பாற்றும்."

04. தொழுகைக்குப் பயிற்றுவித்தல்


சிறுவயதிலிருந்தே பள்ளிவாசலுக்குச் செல்வது, பள்ளிவாசலின் கண்ணி யம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுவதுடன் குழந்தைகள் ஏழு வயதை எட்டிவிட்டால் அவர் களைத் தொழுமாறு பணிக்க வேண்டும். ஏழு வயதிலிருந்து ஐவேளை தொழு கைகளை முறையாகவும் சரியாகவும் நிறைவேற்றுவதற்கு அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னர்கள்:
"உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும்போது தொழச்சொல்லி ஏவுங்கள். பத்து வயதாகும்போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்." (அபூதாவுத்)

இவ்வாறே நோன்பு விடயத்திலும் பெற்றோ ர் பிள்ளைகள் மீது கரிசனை செலுத்த வேண்டும்.

பிள்ளையின் பாடசாலைப் பரீட்சைப் பெறுபேறு திருப்திகரமானதாக இல்லா விட்டால், பிள்ளை பிரத்தியேக வகுப்புகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்லாவிட்டால்... எமது பிள்ளைகளைக் கண்டிக்கின்றோ ம் தண்டிக்கின் றோ ம். ஆனால், எமது பிள்ளை பத்து வயதை அடைந்தும் தொழாதபோது, பன்னிரெண்டு வயதை அடைந்தும் தொழுகையைப் பேணித் தொழாத போது கண்டிக்கின்றோ மா? தண்டிக்கின்றோ மா? என்பது பற்றி ஒவ்வொரு பெற்றோ ரும் சிந்திக்க வேண்டும்.

05. பண்பாட்டுப் பயிற்சியை வழங்குதல்


பிள்ளைகளுக்கு ஆரம்பம் முதல் நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உண்மை, வாய்மையுடன் நடந்து கொள்வதற்கு அவர்களை வழிப்படுத்த வேண்டும். மூத்தோரை மதித்தல், சிறியோருக்க இரக்கம் காட்டுதல், விருந்தாளிகளை கௌரவித்தல், அயலவர்களை மதித்தல், அநாதைகள், விதவைகள் மற்றும் ஏழைகள் மீது அன்பு செலுத்துதல் போன்ற உயர்ந்த பண்புகளின் சொந்தக்காரர்களாக அவர்களைப் புடம்போட வேண் டும். அநாகரிகமான வார்த்தைகள், தரக்குறைவான வார்த்தைகளை எச்சந் தர்ப்பத்திலும் பேசாத, துர்நடத்தைகளுக்கு அடிமைப்படாத மிகவும் நல்ல வர்களாகவும் வல்லவர்களாகவும் குழந்தைகளை  வளர்ப்பது பெற்றோ ரின் கடமை.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
"ஒரு தந்தை தனது குடும்பத்திற்கு கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு நல்ல பண்புகளாகும். நல்ல பண்பைவிட மிகப் பெரிய பரிசு வேறெதுவும் இருக்க முடியாது."

வங்கியில் பணத்தைச் சேமித்து, வகை வகையாய் நகை செய்து, ஊரில் தோட்டம், துறவு வாங்கி தமது பிள்ளைகளுக்கு பரிசாகக் கொடுக்கும் பலர், உயர்ந்த ஒழுக்கப் பண்புகளை, நற்குணங்களை தமது பிள்ளைகளுக்கு வழங் கத் தவறிவிடுகின்றனர்.

சபை ஒழுங்குகள், இங்கிதம், பண்பாடுகள் பேணப்படாத ஒரு பண்பா டற்ற நடைமுறை பரவி வருவதை அவதானிக்க முடிகிறது. இன்று குத்பா பிரசங்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதும், மையவாடியிலும் எமது சிறுவர்கள், இளைஞர்கள் கூடிக் கூடிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை கண் டிக்கதக்கவை மாத்திரமல்ல, இத்தகையோரைத் திருத்துகின்ற பொறுப்பு முதலா வதாக பெற்றோ ரைச் சாரும். ஒவ்வொரு தாயும் தந்தையும் தமது குழந்தையை நெறிப்படுத்த வேண்டும் பக்குவப்படுத்த வேண்டும் பண்படுத்த வேண்டும்.

 

06. இஸ்லாமிய அடையாள புருஷர்களை அறிமுகப்படுத்திக் கொடுத்தல்


அல்குர்ஆன் சொல்கின்ற முன்மாதிரிகளை, நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் காட்டித்தந்த முன்மாதிரிகளை, இஸ்லாமிய வரலாறு அடையாளப்படுத்தியிருக்கின்ற நல்ல மனிதர்களை எமது பிள்ளை களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களின் வரலாற்றுப் பக்கங்களைத் திறந்து காட்ட வேண்டும். அவர்கள் புரிந்த சாதனைகளைத் தெளிவுபடுத்தி அறிவுபூர்வமாகவும் ஆன்மிக ரீதியாகவும் அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோ ரின் தலையாய கடமைகளில் ஒன்று.

இன்று பிள்ளைகள் சினிமாவில் நடிக்கும் நடிக, நடிகைகளையும் விளை யாட்டு வீர வீராங்கனைகளையும் அவர்கள் படைத்த உலக சாதனைகளையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்களைப் பற்றியும் அவர்களு டைய வாழ்க்கை வரலாறு பற்றியும் தெரியாது.

இன்று சமூகத்தில் இத்தகையதோர் அவல நிலை உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

முதலில் பெற்றோ ர் தமது பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை சரியாகப் புரிந்து கொள்ளவது மட்டுமல்ல, முன்மாதிரிமிக்க பெற்றோ ர்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும். இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தந்தை என்ற பாத்திரத்தில் இருந்து தனது புதல்வரை எவ்வாறு வளர்த்தெடுத் தார்கள், எத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தார்கள்? முஹம்மத் (ஸல்லல் லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து கொண்டு ஆற்றிய பணிகள் எவை? லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) என்ற தந்தையைப் பற்றியும் அவர் தனது அருமை மகனை எவ்வாறு நெறிப்படுத்தி, வழிப்படுத்தி வளர்த்தார்  என்பது குறித்தும் அல்குர்ஆன் எப்படிச் சொல்கி றது?... இவை பற்றியெல்லாம் பெற்றோ ர் அறிந்து வைத்திருப்பதன் மூலம் தமது பிள்ளைகளையும் அவ்வாறு நல்வழிப்படுத்த முடியும்.
லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது அருமை மகனை அழைத்து அன்பாக உபதேசம் புரிவதை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:

"எனது அருமை மகனே! அல்லாஹ்வுக்கும் எதனையும் எவரையும் இணைவைக்காதே!

எனது அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவீராக!

நன்மையை ஏவுவீராக!

தீமையைத் தடுப்பீராக!

(நன்மையை ஏவி தீமையை விலக்குகின்றபோது பல சோதனைகள், அச்சுறுத்தல்கள் வரும். அந்த சந்தர்பங்களிலே) நீ பொறுமையை கடைப் பிடிப்பீராக!

(எனதருமை மகனே) இவைதான் உறுதியான விடயங்கள்."

லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான உபதேசமாகும்.

தவிரவும், பண்பாடுகளையெல்லாம் தனது மகனுக்கு கற்றுக் கொடுத் தார்கள் லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(31: 18)

நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும் (என்றும் அறிவுரை கூறினார்).

(31: 19)


அல்லாஹ்வை மட்டும் வணங்குவீராக, அல்லாஹ்வுக்கு இணைவைக் காதே, சகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதே, பெருமை அடிக் காதே, கர்வம் கொள்ளாதே, சப்தத்தை உயர்த்திப் பேசாதே, நடையில் நடுநி லையை பேணுவீராக... என்று லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உயர்ந்த ஒழுக்கங்களை, உயர்ந்த மனித விழுமியங்களை தனது அருமை மகனுக்கு சொல்லிக் கொடுத்து அவரை ஈமானியப் பாசறையில் பயிற்றுவி தார்கள்.
பொதுவாக இன்றைய பெற்றோ ர் தமது பிள்ளைகள் படித்து பல்கலைக் கழகம் செல்ல வேண்டும், பெரும் பட்டம் பெற வேண்டும், பட்டப் பின் படிப்பை மேற்கொள்ள வேண்டும், உயர்ந்த தொழில் புரிய வேண்டும்... என்ற இலட்சியத்தோடு வாழ்ந்து வருகின்றார்கள். இவைதான் வாழ்வின் இலட்சியம் என அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோ ம். அவர்கள் அந்த இலட்சியத்தை அடையாதபோது அவர்கள் மீது கோபப்படுகின்றார்கள் அவர்களைக் கண்டிக்கின்றோ ம் தண்டிக்கின்றோ ம். அவ்வாறு செய்வது பிழையல்ல. ஆனால், தமது பிள்ளைகள் உலக வாழ்வில் வளம்பெற வேண்டுமென்பதற்காக அயராது முயற்சிக்கும் பெற்றோ ர் தமது பிள்ளைகளின் மறுமை வாழ்வு வளம் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்கின்றார்களா என்பதுதான் கேள்வி. இது ஒவ்வொரு பெற்றோ ரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெற்றோ ர் தமது பிள்ளைகளின் தேக ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப் பதற்காக, அவர்களுக்கு சத்துள்ள உணவைக் கொடுக்கின்றார்கள். அவர்களின் மானத்தைப் பாதுகாத்து அவர்களை அழகு பார்ப்பதற்காக பெறுமதிவாய்ந்த ஆடைகளை வாங்கிக் கொடுக்கின்றார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிக்கிறார்கள். அவர்களின் உடல் வலிமையை அதிகரிக்கும் நோக் கில் உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கிக் கொடுக்கின்றார்கள். இவையெல் லாம் தமது பொறுப்பு என்பதை உணர்ந்துள்ள பெற்றோ ர், அவர்களுடைய உள ஆரோக்கியத்திற்காகவும் உழைக்க வேண்டும். அவர்களுடைய உள்ளத் தைப் பாதிக்கின்ற அம்சங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அதேவேளை, பெற்றோ ர் தமது பிள்ளைகளை எளிமையான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டும். ஆடம்பர மோகம் கொண்டவர்களாக, வீண் செல வில் ஈடுபடுகின்ற ஊதாரிகளாக அவர்களை வளர்க்கக் கூடாது.

ஆனால், இன்று என்ன நடக்கிறது? எமது சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் சினிமாவுக்கு அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஹொலிவுட், பொலிவுட் என்று எல்லா வகையான ஜாஹிலியத்தையும் கண்டுகழிக்கும் நிலை உருவாகியிருக் கிறது. மீடியா சிறார்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது. ளுழஉயைட றீலிஉஷ்ழியி னி-ஷ்ழி எனப்படும் ய்ழிஉணுலிலிவக்கும் வீழஷ்மிமிஉம் இளைஞர் யுவதிகளை சிரழிந்த கலாசாரத்தின்பால் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஜுலிஐலிஆழிஸ்ரீஜுதீ இன்று சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இவற்றையெல்லாம் கண்டும் கா ணாமல் இருப்பது பெற்றோ ர் தமது பிள்ளைகளுக்குச் செய்யும் பெரும் துரோகம் என்பதை ஒவ்வொரு பெற்றோ ரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

07. குர்ஆனியக் கல்வியை வழங்குதல்


பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகின்ற முதலாவது கல்வியாக குர்ஆனியக் கல்வி அமைதல் வேண்டும். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கலைகள் போதிக்கப்பட வேண்டும் என மருத்துவத் துறையின் தந்தையாக கருதப்படும் பேரறிஞர் இப்னு ஸீனா மற்றும் சமூக வியல் துறை யின் முன்னோடியாகக் கருதப்படும் பேரறிஞர் இப்னு கல்தூன் ஆகிய இருவ ரும் சொல்கிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் குழந்தைகளுக்கு மூன்று வகையான அறிவு புகட்டப்பட வேண்டும். பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் அம்மூ வகை அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.

01. (இல்முன் பி கல்கிஹி) அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றிய அறிவு.
Medicine, Mathematics, Geography, Geology, Oceanography, Natural Science, Social Science  போன்ற கலைகள் பற்றிய அறிவே அல்லாஹ்வுடைய படைப்புக்கள் பற்றிய அறிவு எனப்படுகிறது. இவை பற்றிய அறிவு எமது பிள்ளைகளுக்கு ஊட்டப்பட வேண்டும்.

02. (இல்முன் பி அம்ரிஹி) அல்லாஹ்வுடைய ஏவல், விலக்கல்கள் பற்றிய அறிவு.
இஸ்லாமிய ஷரீஆ பற்றிய அறிவு, அல்குர்ஆன் ஸுன்னா பற்றிய அறிவையே இது குறித்து நிற்கிறது.

03. (இல்முன் பிஹி) படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் பற்றிய அறிவு.

முதலிரு அறிவுகளையும் கற்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மூன்றாவது அறிவை கற்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வைத் தொழு தல், குர்ஆன் ஓதுதல், திக்ர் அவ்ராதுகளில் ஈடுபடல், வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை நெருங்குகின்ற அளவு ‘இல்முன் பிஹி’ என்ற அல்லாஹ் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவற்றோ டு குழந்தைகள் உளவியல் ரீதியாக நெறிப்படுத்தப்பட வேண் டும். சில குழந்தைகள் வெட்க, கூச்ச சுபாவமுடையோராய் இருப்பார்கள். இன்னும் சில பிள்ளைகள் இலகுவில் பயப்படுபவர்களாக அல்லது தாழ்வு மனப் பான்மையுடையவர்களாக இருப்பார்கள். மற்றும் சிலர் விரைவில் கோபப் படுபவர்களாக, பொறாமைப்படுபவர்களாக இருப்பார்கள்.

பிள்ளைகளைப் பீடித்திருக்கும் இத்தகைய உளநோய்கள் சரியாக அடை யாளப்படுத்தப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும். இவற்றுக்கு பரிகாரம் செய்வதற்கு உளவியல் வைத்தியர்களை அணுகுவதற்கு முன்னர் பெற்றோ ர் பிள்ளைகளின் உளச் சிக்கல்களை சரியாக இனங்கண்டு, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து வழிகாட்ட வேண்டும்.

பிள்ளைகள் மீதான பெற்றோ ரின் கடமைகள் நிறைய இருக்கின்றன.
நாம் வாழ்கின்ற இந்தக் காலம் மிலேனியம் என்று அழைக்கப்பட்டாலும் இதற்கு மற்றோ ரு பெயர் ஜாஹிலிய்யாக் காலம். எல்லா வகையான அனாச் சாரங்களும் பாவங்களும் சமூகத் தீமைகளும் ஒழுக்கச் சீர்கேடுகளும் பரவலாக இருக்கின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோ ம். இது எமக்கு முன்னாலுள்ள மிகப் பெரிய சவால். இதில் நாம் தோல்வியடைந்தால் நாளை மறுமையிலும் தோல்வியடைய நேரிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் எத்தகைய பண்பாடுகளுடன் நடந்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு சம்பவங்கள் தகுந்த சான்றுகளாக விளங்குகின்றன.

சம்பவம்: 01

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது நாட்டு குடிமக்களின் நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் இரவு வேளையில் மாறுவேடம் பூண்டு உலாவருகிறார்கள். அப்போது ஒரு வீட்டில் விதவைத் தாயும் மகளும் உரையாடும் சப்தம் கேட்கிறது.
தாய் சொல்கிறாள். "எனதருமை மகளே, ஆடுகளிலிருந்து பால் கறந்து விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் வாழ்கைச் செலவுக்குப் போதாது. பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்தால் என்ன?

மகள் சொல்கிறாள். "அவ்வாறு செய்யக் கூடாது தாயே! அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கின்றார்."

தாய் மறுமொழி சொல்கிறாள்: "மகளே! என்ன பேசுகிறாய். நாம் பாலில் தண்ணீர் கலப்பதை அமீருல் முஃமினீன் பார்த்துக் கொண்டா இருக்கிறார்?"

இதற்கு அந்த ஏழாம் நூற்றாண்டு யுவதி சொன்ன பதிலைப் பாருங்கள்:
"அன்புத் தாயே! அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இங்கு இல்லாவிட்டாலும் எங்களதும் அமீருல் முஃமினீனி னதும் இரட்சகன் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் தாயே! நாம் எப்படி பாலில் கலப்படம் செய்ய முடியும்?"

கல்வியின், அறிவின், கலாசாரத்தின் அறுவடை இப்படித்தான் வெளிப்பட வேண்டும்.
இன்று படிப்பு என்ற பெயரில் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பிறரின் பையில் இருக்கின்ற பணத்தை எப்படி என்னுடைய கைக்கு கொண்டு வருவது? அதற்கு என்ன தந்திரத்தைக் கையாளலாம்? தன்னிடமுள்ள பணத்தை வேறு யாரும் அறியா வண்ணம் தேவையுள்ள மனிதர்களின் கையில் கொண்டு சேர்ப் பதற்கான உத்தியை, உபாயத்தை சொல்லித் தருகின்ற மார்க்கம் இஸ்லாம்.

சம்பவம்: 02

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது குடிமக்களைக் கண்காணிப்பதற்காக மாறுவேடம் பூண்டு உலாவருகிறார்கள். ஆடு மேய் துக் கொண்டுடிருக்கும் இளைஞனை சந்திக்கிறார்கள். அவனுடைய ஈமா னையும் ஒழுக்கப் பண்பாட்டையும் பரீட்சிக்கும் நோக்கில் அவனிடம் கேட் கிறார்கள்:

"மகனே! எனக்கோர் ஆடு வேண்டும். பணம் தருகிறேன். ஓர் ஆட்டை எனக்குத் தந்துவிடு."

அப்போது அந்த இளைஞன் சொன்னான்: "பெரியவரே! இந்த ஆட்டைத் தர முடியாது. இவை என்னுடையவையல்ல. எனது எஜமானுடைய ஆடுகள் இவை. நான் ஓர் அடிமை. எப்படி நான் உங்களுக்கு இந்த ஆட்டை விற்பது?"

அப்போது உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "மகனே! உனது எஜ மான் இங்கே இல்லை. அவர் உன்னைக் காணப்போவதுமில்லை. ஓர் ஆட் டை எனக்குத் தந்துவிடு, நான் உனக்கு ஒரு தொகைப் பணமும் தருகிறேன். உனது எஜமான் ஓர் ஆடு குறைகிறது. எங்கே என்று கேட்டால் ஓநாய் ஓர் ஆட்டைப் பிடித்து விட்டது என்று சொல்" எனச் சொன்னபோது அந்த ஏழாம் நூற்றாண் டில் வாழ்ந்த பாமர இளைஞனின் பதில் இப்படி அமைந்தது.

"பெரியவரே! எனது எஜமான் இங்கு இல்லை. ஆனால், படைத்த அல் லாஹ் எங்கு இருக்கிறான். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றானே! எனது எஜமானனுக்கு எப்படி நான் துரோகம் செய்ய முடியும்?"

இந்த பதிலைக் கேட்ட அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். அடுத்த நாள் காலை அந்த இளைஞனையும் இளைஞனின் எஜமானனையும் தனது சபைக்கு அழைக்கிறார். அந்த அடிமைக்குரிய பணத் தொகையை எஜமான னுக்குக் கொடுத்து அந்த இளைஞனை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்துவிட்டு அவ்விளைஞனைப் பார்த்துச் சொல்கிறார்:

"மகனே! இந்த உலகத்தில் உன்னை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்த இதே வார்த்தை உன்னை மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை செய்து சுவனத்தில் கொண்டு சேர்க்கும் என நான் நம்புகிறேன்."

இதுவல்லவா கல்வி. இதுவல்லவா அறிவு. இதுவல்லவா கலாசாரம்!

We have 19 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player