மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு இளமைப் பருவம்!

நாம் இவ் உலகில் பெற்றிருக்கின்ற அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்த ஓர் அருட்கொடைதான் மனிதர்களாகப் பிறந்திருப்பது. முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள அத்தனை படைப்பினங்களை விடவும் மனிதனே மிக உயர்ந்த சிருஷ்டி என அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் சொல்கின்றான்.

"ஆதமுடைய சந்ததியினரை நாம் கௌரவித்திருக்கின்றோம்."
நீர், நிலம், தாவரங்கள், கால்நடைகள், மிருகங்கள் உட்பட உலகத்திலிருக்கின்ற எல்லா உயிரினங்களும் ஜீவராசிகளும் மனிதனுக்காக, மனித நலனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மனிதனோ உலகத்தைப் படைத்து, பரிபாலித்து, இரட்சித்துக் காப்பாற்றுகின்ற அல்லாஹ்வுக்காகப் படைக்கப்பட்டிருக்கி றான். மனித வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன.


01. குழந்தைப் பருவம்

02. இளமைப் பருவம்

03. முதுமைப் பருவம்


குழந்தைப் பருவம் மிகவும் பலவீனமானது. முதுமைப் பருவமும் அவ்வாறே மிகவும் பலவீனமானது. ஆனால், இவ்விரு பருவங்களோடும் ஒப்பிடுகின்றபோது மனித வாழ்க்கையில் மிகவும் பலமான பருவம், வலிமைமிக்க பருவமென்றால் அது இளமைப் பருவம்தான். மனிதானாகப் பிறந்ததே பெரிய அருள். அதிலும் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கும் இளமைப் பருவம் மிகப் பெரும் அருள்.

இளமைப் பருவம் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, முறுக்கேறிய பருவம் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமைமிக்க பருவம். இந்த வகையிலேயே இளமைப் பருவம் மிகப் பெரும் அருளாக விளங்குகிறது. குழந்தைப் பருவத்தில் இளமையின் முக்கியத்துவத்தை எவராலும் உணர முடியாது. ஆனால், முதுமைப் பருவத்தில் இவ்இளமைப் பருவத்தின் முக்கியத்துவத்தை உணராத எவரும் இருக்க முடியாது.

வயோதிபத்தை அடையும் ஒவ்வொரு மனிதனும் உலகில் திரும்பக் கிடைக்காத இளமை மீண்டு வராதா!? என ஏங்குவான். இதனையே ஓர் அரபுப் பழமொழி இப்படிச் சொல்கிறது:

"ஒரு நாள் அந்த இளமை மீண்டு வராதா!"

அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் ஒவ்வோர் அருளும் அமானிதம். உடல் ஆரோக்கியம் ஓர் அருள். அது அமானித மும் கூட. வாழ்க்கை ஓர் அருள். அது அமானிதமும் கூட. அந்த வகையில் இளமை எனும் பேரருளும் அமானி தம். அது குறித்து நாம் நாளை மறுமையில் விசாரிக் கப்படுவோம்.

மறுமையில் ஒவ்வொரு மனிதனும் ஐம்பெரும் வினாக்களுக்கு பதில் சொல்லாமல் அவ்விடத்திலிருந்து ஒரு சாணும் நகர முடியாது.
"மறுமை நாளில் ஆதமுடைய மகன், அவனது வாழ்நாள் எப்படிக் கழிந்தது, அவனது இளமை எவ்வாறு கழிந்தது, சம்பாதித்தது எவ்வாறு, செலவளித்தது எப்படி, கற்றுக் கொண்டதை வைத்து என்ன செய்தான்? ஆகிய ஐந்து கேள்வி களுக்கு பதிலளிக்காமல் ஓர் எட்டும் நகர முடியாது" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அந்த ஐம்பெரும் கேள்விகளுள் முதலிரு வினாக்களும் மனித வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. அதிலும் குறிப்பாக, மனித வாழ்க்கையில் பெரும் அருளாகக் கிடைத்த இளமை குறித்து  கடுமையாக விசாரிக்கப்படும். அப்போது இளமைப் பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் கழித்தவர்கள் அந்தப் பயங் கரமான நாளில் அர்ஷுடைய நிழலின் கீழ் இருப்பார்கள் என்ற சுபசெய் தியையும் சொன்னார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

இளமைப் பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதிலேயே வாழ்வின் வெற்றி தங்கியிருக்கிறது என்ற உண்மையை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. இதன் காரணமாகவே இஸ்லாம் இளம் பருவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

"அல்லாஹுத் தஆலா எல்லா நபிமார்களையும் இந்த உலகத்துக்கு இளை ஞர்களாகவே அனுப்பி வைத்தான். அவ்வாறே அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அறிவைக் கொடுக்கின்றபோதும் இளைஞனுக்கே அதனைக் கொடுத்தான்" எனக் கூறிய இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்,

"இப்ராஹீம் என்று சொல்லப்படுகின்ற ஓர் இளைஞனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்தான் இந்த வேலையை செய்திருப்பார் என்று நாம் நினைக்கிறோம் என்று அந்த மக்கள் பேசிக் கொண்டார்கள்" எனும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்ததாக இமாம் இப்னு அபூ ஹாதிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

இங்கு நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அல்குர்ஆன் ஓர் இளைஞனாகவே  அல்குர்'ஆன்  அறிமுகப்படுத்துகிறது.
இளமைப் பருவத்தை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஓர் இளைஞன் விரும்பினால் சுவனம் நோக்கிய பாதையை செப்பனிடும் பருவமாக இளம் பருவத்தை அமைத்துக் கொள்ளலாம். நரகத் தை நோக்கி நகரத்துகின்ற பருவமாகவும் அமைத்துக் கொள்ளவும் முடியும்.

இளமைப் பருவத்தை கத்திக்கு உவமைப்படுத்தலாம். ஒரு கத்தி யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் பயன்பாடு அமைகிறது. ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் கத்தியைக் கையிலெடுத்தால் அதனைக் கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றப் போராடுவார். அதே கத்தி ஒரு கொலைகாரனின் அல்லது கொள்ளைக்காரனின் கையில் இருந்தால் அதன் மூலம் ஓர் உயிர் கொல்லப் படலாம் இரத்தம் ஓட்டப்படலாம். இளமைப் பருவமும் இப்படித்தான். யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இளமைப் பருவத்தின் நிலையும் அமையும். ஓர் இளைஞனின் நிலை அவன் எந்தக் கொள்கையைப் பினபற்றுகின்றான் எத்தகைய போக்கைத் தெரிவு செய்கிறான் என்பதில்தான் தங்கியிருக்கிறது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஏற்று, அவர்களை ஆதரித்தவர்களும் அரவணைத்தவர்களும் இளைஞர்கள்தான். அவ்வாறே நபியவர்களைக் கடுமையாக எதிர்த்து அவருக்கும் அவரை ஏற்றவர்களுக்கும் சித்திரவதை செய்தவர்களும் வாலிபர்கள்தான்.

ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆரம்ப கட்டத்தில் இளைஞர்கள் தனக்களித்த மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களை மெச்சிப் புகழ்ந்து இவ்வாறு பாராட்டினார்கள்:

"வயோதிபாகள் என்னைப் புறக்கணித்தபோது இளைஞர்களே எனக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்."


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழைப்புப் பணிக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்கா நிராகரிப்பாளர் களின் சித்திரவதை தாங்க முடியாமல் முதன் முதலாக ஒழுங்கு செய்த அபீசீ னிய ஹிஜ்ரத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் இளைஞர்களும் யுவதி களும் என்பதை இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றில் அநேகமான சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இளைஞர்கள். பதினேழு வயதுக்கும் இருபத்தேழு வயதுக்கும் இடைப்பட்ட வாலிபர்கள்தான் இஸ்லாத்தின் தூதை உலகளாவிய ரீதியில் பரவச் செய்த வர்கள். சிந்துப் பிரதேசத்தைக் கைப்பற்றியபோது படைத் தளபதியாக இருந்த முஹம்மத் காசிமுக்கு வயது பதினேழு. கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக் கப்பட்ட பைசாந்திய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரத்தைக் கைப்பற்றிய முஹம்மது பின் பாதிஹுக்கு அப்போது வயது இருபத்து மூன்று மாத்திரம்தான். தாரிக் பின் ஸியாத் ஸ்பெய்னை இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது அவருக்கு வயது இருபத்தொன்று.

இப்படி எமது இளைஞர்கள் வரலாற்றுப் புருஷர்களாகத் திகழ்ந்த வரலாறு மறுமை வரை நினைவுகூரப்படும்.

அல்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இளம் அடையாள புருஷர்கள்

 

01. இளைஞன் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)


சத்தியத்தைத் தேடிப் புறப்பட்ட இளைஞன் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸ லாம்) நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், நான் என்ன செய்ய வேண்டும், நான் எங்கு செல்ல இருக்கிறேன், எனது வாழ்வின் இலட்சியம் என்ன, என்னைப் படைத்தவன் யார்? போன்ற வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடை தேடுகிறார். ஈற்றில் அவர் சத்தியத்தைக் கண்டறிந்து அல்லாஹ்வுக்கு தலைவணங்குகிறார். பின்னர் பதினான்கு வயதுடைய இளைஞன் இப்ராஹீம் தனது தந்தையிடம் சத்தியத்தை எடுத்துச்  சொல்கிறார்.
உணர்வுகள் பூத்துக் குலுங்கும் இளமைப் பருவத்தில் உலகில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) பல சவால்களுக்கு முகங்கொடுத்தார்கள். ஒருபக்கம் தீவிர சிலை வணங்கியாக இருந்த அவரது தந்தை ஆஸர் இளைஞன் இப்ராஹீமை அச்சுறுத்துகிறார். மறுபக்கம் அன்றைய எகிப்தின் கொடுங்கோல் மன்னன் நம்ரூத் சத்தியத்தை எடுத்துச் சொன்ன ஒரே காரணத்திற்காக நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நெருப்புக் குண்டத்திலே தூக்கி எறிகின்றான். அப்போது அவருக்கு வயது பதினாறு. கொள்கை ரீதியாக முரண்பட்ட முஷ்ரிக்குகளும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) இவ் அத்தனை அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து உலகில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக இளம் பராயத்திலேயே ஷாம், எகிப்து, பலஸ்தீன், மக்கா ஆகிய நான்கு பகுதி களுக்கு ஹிஜ்ரத்துக்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

02. இளைஞன் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்)


ஒழுக்கத்துக்கும் பண்பாட்டுக்கும் நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் இறையச்சத்துக்கும் மிக உயர்ந்த முன்மாதிரிமிக்க மற்றோர் இளைஞனை அல்குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது. அந்த இளைஞனின் ஒழுக்கப் பண்பாட் டைச் சொல்வதற்கு அவரது பெயரிலேயே ஓர் அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி வைத்தான். அவர்தான் இளைஞன் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்.
இளைஞன் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள வீட்டில் தனது உடன்பிறந்த சகோதரர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். இரக்கமுள்ள தந்தையையும் குடும்பத்தையும் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனது சகோதரர்களாலேயே கிணற்றிலே தூக்கி எறியப்படுகிறார். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. கிணற்றிலிருந்து மீட்டெடுக்கப்படும் சிறுவன் யூஸுப் பின்னர் அடிமையாக விற்கப்படுகிறார்.

பின்னர் எகிப்தின் அரச மாளிகையில் வளர்கிறார். அரச மாளிகையின் இளவரசியினால் இளைஞன் யூஸுபின் கற்புக்கு விலை பேசுகிறார். அவரது கற்புக்கும் ஒழுக்கத்துக்கும் சவால் விடுக்கப்படுகிறது. இறுதியில், இளவரசி அவரது கற்புக்கு களங்கம் கற்பித்து அவரை சிறைபிடிக்கிறாள். இவ் அத்தனை சவால்களுக்கும் இளைஞன் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) வெற்றிகரமாக முகங்கொடுக்கிறார்.

நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறுபராயம் முதல் தொடர்ந் தோச்சையாக கவலைகளைச் சுமர்ந்து பொறுமையாக வாழ்ந்தார்கள்.
எவ்வகையான துன்ப, துயரங்களை, சோதனைகளை எதிர்கொண்ட போதும் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். பாவம் செய்வதற்கான, வாலிப இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அவரைத் தேடி வந்தபோதும் அதற்கான சூழல் அமைந்தபோதும் அவர் அத்தகைய மானக்கேடான செயலைச் செய்யாமல் பொறுமையைக் கடைபிடித்தார்கள் அல்லாஹ்வுக்கு வழிபடும் விடயத்தில் பொறுமையாக இருந்தார்கள்.
அல்லாஹ் எல்லா வகையான பொறுமையும் இளைஞன் யூஸுபிடம் இருக்கின்றதா என்று பரீட்சித்துப் பார்த்தான். ஒவ்வொரு பரீட்சையிலும் இளை ஞன் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) வெற்றி பெறுகிறார். இதன் காரணமாகவே அல்லாஹுத் தஆலா அவரது பெயரிலேயே ஓர் அல்குர்ஆன் அத்தியாயத்தை இறக்கி மறுமை நாள் வரை அவரது வாழ்க்கையை நினைவுகூர்கிறான்.

ஸூரா யூஸுபின் சிறப்பு குறித்துச் சொல்லும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்,

"கவலையைச் சுமந்திருக்கின்ற நிலையில் யார் ஸூரா யூஸுபை ஓதுகின் றாரோ அல்லாஹ் அவருடைய கவலையை நீக்கி வைப்பான்" எனக் குறிப்பிடு கிறார்கள்.

03. இளைஞன் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)


ஆல்குர்ஆன் பலம்வாய்ந்த, அபார திறமைமிக்க, அற்புதமான ஆற்றல்ப டைத்த மற்றுமோர் இளைஞனை அறிமுகப்படுத்துகிறது. அவர்தான் முழு உலகையும் ஆட்சிசெய்த பேரரசன் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்.
எந்தளவுக்கு அவரிடம் அறிவும் ஆற்றலும் இருந்தது என்றால், அவர் பறவை கள், விலங்குகள், ஊர்வன, மரம், செடி, கொடிகளின் மொழியை அறிந்திருந் தார். ஜின்கள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. காற்றும் தீயும் அவரது கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்தன. அந்தளவுக்கு அறிவும் ஆற்றலும் அவரிடம் இருந் தன. எந்த ஒரு பிரச்சினைக்கும் சரியாகவும் துல்லியமாகவும் தீர்வு சொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தவர் அவர். உலகில் வேறு எவருக்கும் கொடுக்காத ஆட்சி, அதிகாரத்தை அல்லாஹ் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வழங்கியிருந்தான். எல்லா வகையான அறிவையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருந்தான்.

"தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான், முஃமின்களான தன் நல்லடியாரகளில் அநேகரை விட நம்மை மேன்மையாக்கினான் என்று கூறினார்கள்."
(ஸூரதுந் நம்ல்: 15)


அந்த அறிவை, ஆற்றலை வைத்து அவர் உலகத்தில் அராஜகம் புரியவில்லை அட்டகாசத்தில் ஈடுபடவில்லை எவருக்கும் அநியாயம் இழைக்கவில்லை. அவர்களது மனோநிலை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

"இது எனது இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா? இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக எனக்குப் புரிந்த பேரருளாகும்."       (27: 40)

ஈமானிய உள்ளத்திலிருந்து உதித்த வார்த்தைகள் இவை.

04. இளைஞன் துல்கர்னைன்


உலகில் பல அற்புதமான சாதனைகளை நிலைநாட்டிய துல்கர்னைன் எனும் ஸாலிஹான ஓர் இளைஞனை அறிமுகப்படுத்துகிறது அல்குர்ஆன். அவர் ஒரு பொறியியல் துறை விஞ்ஞானியாக இருந்தார். அதனை வைத்து அவர் ஓர் அநியாயக்கார சமூகத்திடமிருந்து மற்றோரு சமூகத்தைக் காப்பாற்றுவதற் காக ஒரு பெரும் மதிலைக் கட்டினார். அவரது அறிவையும் ஆற்றலையும் திறமையையும் பார்த்த மக்கள் அவரை மெச்சிப் பாராட்டினார்கள். அப்போது அவர் மொழிந்த ஈமானிய வார்த்தைகளை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:

"இது என்னுடைய இறைவனின் அருள்தான். எனது இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும்போது இதனைத் தூள் தூளாக்கி விடுவான். மேலும் எனது இறைவனின் வாக்கறுதி உண்மையானதே!"                (18: 98)

இன்றைய எமது இளைஞர்கள், யுவதிகள் இந்த ஈமானியப் பின்புலத்தில் வளர்க்கப்படுகின்றார்களா? புடம் போடப்படுகின்றார்களா?

05. இளைஞன் மூஸா (அலைஹிஸ்ஸலாம்)


அல்குர்ஆன் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்ற ஓர் இளைஞனைப் பற்றியும் சொல்கிறது. அவர் நம்பிக்கைக்குரியவர், நேரமைமிக்கவர். வீரத்துக்கம் வல்ல மைக்கும் பேர்போன ஒரு பலசாலி அவர்.

நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வீரத்தைப் பற்றி ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய மகள் சொல்வதை அல்குர்ஆன் இப் படிச் சொல்கிறது.

ஞ்சூஹளசூ றரிந்டீசூஹநண்ஹ்சூஹ கூசூஹ பசூசூரி ஹளுசூபனீரிழீநண் றரிஹுசூ ஒசூகூழீசூ ஹ்சூரி ஹளுசூபனீசூழீசூ ஹளஞ்சூசீரிகூஹுண் ஹளபசூஹ்ரிகூண்
"அத்தருணத்தில் அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) என் தந்தையே நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக (இந்த) நம்பிக்கையுள்ள பலசாலியை நீங்கள் கூலிக்கு அமர்த்திக் கொள்வது மிக்க நல்லது என்று கூறினாள்." (ஸூரதுல் கஸஸ்: 26)

இளைஞன் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் இலட்சிய வேட் கையோடு தஃவாப் பணி புரிந்த மற்றுமோர் இளைஞனான ஹாரூன்  (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் பற்றியும் அல்குர்ஆன் பேசுகிறது.

06. குகைவாசிகளான இளைஞர்கள்


ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதற்காக வாழ்ந்து பல நூற்றாண்டு காலம் தூக்கத்திலிருந்து கண் விழித்து இறுதி வரைக்கும் ஏகத்துவத்திலே வாழ்ந்து மரணித்த இளைஞர் கூட்டத்தினரை அல்குர்ஆன் படிப்பினைக்காக வர்ணிக் கின்றது.

"அவர்களது வரலாற்றை உண்மையுடன் நாம் உமக்கு கூறுகிறோம். நிச்சயமாக அவர்கள் இளைஞர்களாவர். அவர்கள் தம் இறைவனை நம்பினார்கள். மேலும் அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப்படுத்தினோம். எங்கள் இறைவன், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாவான். அவனையன்றி (யாரையும்) கடவுளாக நாம் பிரார்த்திக்கவே மாட்டோம். அவ்வாறு செய்தால் நாங்கள் வரம்பு மீறிய சொல்லைக் கூறியவர்களாவோம் என்று அவர்கள் (துணிவுடன்) நின்றபோது அவர்களின் உள்ளங்களை நாம் மேலும் பலப்படுத் தினோம். நமது சமுதாயத்தினராகிய இவர்கள் அவனை விடுத்து பல கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அதிக அநியா யக்காரன் யார்? (எனவும் அவர்கள் கூறினார்கள்.) இவர்களை விட்டும், அல்லாஹ்வைத் தவிர எவற்றை வணங்குகிறார்களோ அவற்றை விட்டும், நீங்கள் விலகும்போது அந்தக் குகையில் தஞ்சமடையுங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை வாரி வழங்குவான். மேலும் உங்கள் காரியத்தில் எளிமையை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான் (என்று தமக்குள் கூறிக் கொண்டனர்)."          (ஸூரதுல் கஃப்: 13 16)

நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தி யில் ஹிழ்ர் எனும் பேரறிஞரைத் தேடிச் சென்று அவரிடம் பொறுமையுடன் அறிவைப் பெற்ற கதையை ஸூரதுல் கஃப் அழகாக விளக்குகின்றது.

பலமிக்க, சக்திவாய்ந்த எத்தனை இளைஞர்களை நம்பிக்கையும் நாணயமுமிக்க வாலிபர்களை இந்த சமுதாயம் உருவாக்கியிருக்கின்றது என்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

07. இளைஞன் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)


ஜாஹிலிய்யாக் கால மக்கள் வெறும் மடையர்கள். மது, மாதுக்களை அனு பவிப்பதுதான் அவர்களது வாழ்க்கைவின் நோக்கம். நீர் அருந்துவது போன்று மது அருந்தும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். அன்று விபச்சாரம் மலிந்திருந்தது. ஒட்டகத்தின் கயிறு திருட்டுப்போனதற்காக வருடக் கணக் கில் போர் புரியும் முரடர்களும் மடையர்களும் அந்தக் காலத்தில் வாழ்ந்தார் கள். பெண் சிசுக்களை உயிரோடு புதைக்கும் வன்நெஞ்சர்கள் வாழ்ந்த காலம் அது.

இப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்து, வளர்ந்தார்கள். ஆனால், அவர் அந்தச் சூழலோடு கரைந்து போகவில்லை மதுவும் மாதுவும் அவரை வழிகெடுக்கவில்லை மதுபானம் அருந்த அனுமதிக்கப்பட்ட அக்காலத்தில் ஒரு துளிகூட மது அருந்தாத இளைஞர் அவர். அவர் சிறுபராயத்திலிருந்தே நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கினார். இளமை துள்ளும் வாலிபப் பருவத்தில் அஸ்ஸாதிக் (உண்மையாளர், வாய்மை யாளர்), அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர், நேர்மை தவறாதவர்) என்று அக்கால மக்களாலேயே புகழப்பட்டார். அனைவருக்கம் ஒரு முன்னுதாரண புருஷராக வாழ்ந்து காட்டினார்.

இவ்வாறு எத்தனை எத்தனை முன்மா திரிமிக்க அடையாள புருஷர்களை (யூலியி னிலி-யி) இஸ்லாம் அறிமுகப்படுத்தியி ருக்கிறது புடம்போட்டு வளர்த்திருக் கிறது. இத்தகைய ஆளுமைகளே இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரண புருஷர்களளாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய இளைஞர்களின் நிலை

இன்று எமது இளைஞர் யுவதிகளை சிந்தனா ரீதியான படையெடுப்பு ஆட்டிப்படைத்து வருகிறது. மதசார்பற்ற, சடவாத, தாராண்மைவாத சிந்தனைகளால் தாக்கமடைந்து அதில் அள்ளுண்டு செல்கின்றார்கள்.
இன்றைய எமது இளைஞர்களிடம் உயர்ந்த இலட்சியங்கள் குறிக்கோள்கள் இல்லை. அற்ப ஆசைகளுக்குப் பின்னால் போட்டி போட்டுப் பயணிக்கின்றார்கள். தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். இணையதளமும் சமூக ஊடகங்களும் எமது இளைஞர்களையும் யுவதிகளையும் பெரும் சமூகச் சீர்கேட்டை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. நாடகத் தொடர்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் யுவதிகளின் நிலை பரிதாபகரமானது. விரசமும் ஆபாசமும் தலை விரித்தாடும் இணையதளங்களுக்குள் சிக்கி அவற்றுக்கு அடிமைப்பட்டிருக் கிறார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உருவாக்கிய இளம் ஸஹாபாக்களை முன்னுதாரணங்களாக ஏற்றுப் பின்பற்றுகின்ற ஓர் இளைஞர் சமூகத்தைப் பார்க்க முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

எமது அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து மிகத் தீவிரமாக சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். எமது இளைஞர்களும் யுவதிகளும் கையில் சுமந்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகள், ஐ போன்கள் மற்றும் இணையதளங்களுக்கூடாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இணையதளங்களைப் பார்வையிடுபவாகளில் 60 வீதமானோர் ஆபாசமான விரசமான, படங்களைப் பார்ப்பதற்காகவே இணைய தளங்களுக்குள் நுழைகிறார்கள் என அண்மைக்கால ஆய்வு முடிவு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஆபாச இணை யதளங்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இன்று இதன் விளைவுகளை அவதானிக்க முடிகிறது. எமது இளைஞர்களும் யுவதிகளும் காதலுக்குப் பின் னால் செல்கிறார்கள். போதைவஸ்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தவிரவும் எமது இளைஞர், யுவதிகளின் ஆடைக் கலாசாரம் தரக் குறைவான, அநாகரிகமான முறைகளில் அமைந்திருப்பதற்கும் இன்றைய சினிமாவின் ஆக்கிரமிப்பே காரணம். பள்ளிவாசலுக்கு அசிங்கமான வார்த்தைகள் பொறிக் கப்பட்ட, அவ்ரத் வெளித் தெரியும் வகையில் ஆடை அணிந்து வருகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை இன்று யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
இதற்கு இஸ்லாமிய அழைப்பாளர்கள், சமூகத் தலைவர்கள், ஆலிம்கள், மூத்தவர்கள் அனைவரும் நாளை மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும்.

"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
(ஸூரதுத் தஹ்ரீம்: 06)


பெற்றோரின் கவனத்திற்கு


எமது பிள்ளைகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்துகிறோம். வகைவகையான உணவு, பானங் கள், கலர் கலராய் ஆடைகள், அதிநவீன கணினி, மடிக் கணினி (laptolp) நவீன ரக கையடக்கத் தொலைபேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க நாம் தயார். ஆனால், மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?
குழந்தைகளை குறிப்பாக இளைஞர், யுவதிகளை எப்போதும் எமது கண் காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

"நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகள். உங்களுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்" என நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பிள்ளைகள் இந்த உலகத்திலே எமக்குக் கிடைத்திருக்கின்ற மிகப் பெரும் அருள். அருட் செல்வங்களில் எல்லாம் உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். எனவேதான் அல்லாஹ் சொல்கிறான்:

"செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்."
(ஸூரதுல் கஃப்: 46)


குழந்தைகளையும் சொத்து, செல்வங்களையும் அலங்காரம் எனச் சொன்ன அல்குர்ஆன், அவர்கள் சோதனையாகவும் (பித்னா) இருக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றது.

"நிச்சயமாக உங்கள் செல்வமும் உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனை யாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்."      (ஸூரதுல் அன்பால்: 28)

எமது பிள்ளைகள் இந்த உலகத்திலும் நாளை மறுமையிலும் அலங்காரமாக (ஸீனா) இருக்க வேண்டும். எம்மை நரகில் தள்ளுகின்றவாகளாக அல்லாமல் சுவனத்திற்கு அழைத்துச் செல்பவர்களாக அவர்கள் திகழ வேண்டும். அவர்களை அதற்காகத் தயார்படுத்த வேண்டியது எமது பொறுப்பு.

வாலிபப் பருவத்தில் பதினேழு முதல் இருபத்தொன்று வயது வரையுள்ள காலம் மிகவும் முக்கியமானது. அந்தப் பருவம் பெற்றோலையும் பஞ்சையும் ஒத்த பருவம். இந்த பருவத்திலே அவர்கள் ஓய்வாக இருக்கிறார்கள். இவர்களது விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு முறையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். சரியான பாதையில் இவர்கள் வழிந டத்தப்பட வேண்டும். நடிகர் நடிகைகளையும் பாடகர் பாடகிகளையும் விளையாட்டு வீர வீராங்கனைகளையும் அடையாள புருஷர்களாக மதித்து அவர்களைப் போன்று செயலாற்றுகின்ற இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல முன்மாதிரி இஸ்லாமிய ஆளுமைகளை அறிமுகப்ப டுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை.

மூஸா, ஈஸா, யூஸுப், இப்ராஹீம் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரையும் உத்தம நபித் தோழர்களையும் தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், முன்னோர்கள், அறிஞர்கள் மேதைகள், சிந்தனையாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என ஆயிரக் கணக்கான இளைஞர்களின் வரலாற்றை இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்தி ருக்கிறது. இன்றைய எமது இளைஞர்கள் இத்தகையவர்களை முன்னுதாரண புருஷர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? அதற்கான வழிகாட்டல்க ளை நாம் வழங்கியிருக்கின்றோமா? அத்தகைய நல்லடியார்கள் பற்றி அவர் களுக்கு அறிமுகப்படுத்திக் கொடுப்பதற்கான கருத்தரங்குகள், வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றனவா?

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் , மொழிப் பாடம் ஆகியவற்றில் திறமைச் சித்தி பெற வேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கில் செலவளித்து மாலை நேர, இரவு நேர வகுப்புக்களை ஒழுங்கு செய்து கொடுக்கும் நாம், மறுமையில் அந்தப் பயங்கரமான, மகத்தான பரீட்சையில் எமது பிள்ளைகள் சித்தி பெற்று சுவனம் நுழைய வேண்டுமே என்பது குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கின்றோமா? எமது முன்னுரி மைப் பட்டியலில் இது எந்த இடத்திலே இருக்கிறது?

அல்லாஹ்வின் பேரருளினால் இன்று எமது இளைஞர், யுவதிகளை வழிப்ப டுத்துவதற்காக பல இஸ்லாமிய அமைப்புக்களால் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங் கள் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், தஃவாப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட பல இஸ்லாமிய அமைப்புகள்   சமூகத்தின் முதுகெலும்பாக, எதிர்கால தலைவர்களாக திகழ்கின்ற இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்திருக் கின்றன.

இன்றைய இளைஞர், யுவதிகளை இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆவன செய்வது பெற்றோரின் பொறுப்பு.

We have 12 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player