வாழ்த்துச்செய்திகள் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்

Article Index
வாழ்த்துச்செய்திகள்
Alhaj Yakooth Naleem
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
அல்ஹாஜ் என்.எம். அமீன்
நிர்வாகத்தார் - இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்
Dr. Mareena thaha Reffai
Ash-sheikh H.Abdul Nazar
All Pages

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்


உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்களின் பெயரில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தமிழ் கூறும் உலகம் பயன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும். உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்கள் இன்றைய காலத்தில் இஸ்லாமிய சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு தனி இடத்தை வகிப்பவர். அதிலும் குறிப்பாக மனித வாழ்க்கையின் அனைத்து மருங்கிலும் கவிழ்ந்திருக்கின்ற ஜாஹிலிய்ய இருளை, அல்லாஹ் அவருக்கு வழங்கிய மார்க்க விளக்கத்தின் வெளிச்சத்தால் தோலுரித்துக் காட்டும் ஆற்றல் கொண்டவர்.

மார்க்க விளக்கம் என்பதன் அடி நாதமே இந்தப் பண்புதான். ஒவ்வொரு காலத்திலும் அக்காலத்திற்கேயுரிய ஜாஹிலியத்துக்கள் மனிதனின் சிந்தனையையும் செயற்பாடுகளையும் ஆக்ரமித்து விடுகின்ற போது அவற்றை துல்லியமாகக் கண்டறிந்து அவற்றின் மீது சத்தியம் எனும் அழைப்பை வைத்து தகர்க்கின்ற அதே வேளை அந்த இடத்தில் இஸ்லாமிய வாழ்வியலை அதன் அடிப்படைகளோடு நிறுவும் வல்லமைதான் மார்க்க விளக்கமாகும்.

அசத்தியம் அல்லது ஜாஹிலிய்யத் எதிர்ப்பின்றி, அச்சுறுத்தலின்றி, மனித சிந்தனைகளையும் நடத்தைகளையும் ஆக்கிரமிக்கின்ற போது அவற்றை ஒரு பொருட்டாகவே கருதாமல் சம்பிரதாயங்களைப் போதிப்பது மார்க்கத்தின் அடையாளமல்ல.

உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்களின் ஆக்கங்களை நேரடியாகவும் எழுத்திலும் ஓடியோ, வீடியோ மூலமாகவும் கேட்டறிந்தவர்கள் மார்க்க விளக்கம் பற்றிய இந்த உண்மையை புரிந்திருப்பார்கள். அதனால் அவரது விளக்கங்களை விரும்பிக் கேட்கும் ஒரு சமூகம் தேசத்தில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் இன்று உருவாகி இருக்கின்றது.

உஸ்தாத் அகார் அவர்களின் சிந்தனை உலகளாவிய இஸ்லாமிய எழுச்சி, அதன் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய இயக்கம் என்பவற்றினை பிரதிபலிப்பதாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து முகாம்களைச் சார்ந்தவர்களும் அவரது அணுகுமுறையை விரும்பி ஏற்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு சிந்தனையாளரின் படைப்புக்களை தமிழுலகத்திற்கு கிடைக்கச்செய்யும் முயற்சி அல்லாஹ்வின் அருள் பெறத்தக்க ஒரு முயற்சியாகவே இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

அகார் இணையத்தளம் இன்னும் பல நல்லம்சங்களை உள்ளடக்கியதாக இருந்த போதிலும் ஈண்டு குறிப்பிடத்தக்க அம்சத்தையே எனது செய்தியாக பதிவு செய்ய விரும்பினேன்.

அல்லாஹ், அவர்களின் தொண்டு சிறக்க அருள் பாலித்து இந்த இணையத்தளத்தினூடாக பல்லாயிரம் பேர் பயனடையும் வாய்ப்பையும் நல்குவானாக.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர்,
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி

 

 We have 13 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player