ஜம்இய்யதுல் உலமாவின் அனைவருக்கும் கல்வி

 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ிஇனைவருக்கும் கல்வி என்ற கல்வி மறுமலர்ச்சி மாநாடு நேற்றுமுன்தினம் வெள்ளவத்தை எக்ஸலன்சி மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப், பாடசாலைக் கல்விப் பிரிவின் செயற்திட்டங்கள், கல்விக்கான எதிர்காலத் திட்டங்கள், முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கான தேவைப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் மதனி, பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத், இணை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம், கல்வித் துறைப் பொருப்பாளர் அஷ்ஷெய்க் முர்ஷித் முழப்பர் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், மூத்த உலமாக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மாநாட்டின் கருப்பொருள் உரையை பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத் நிகழ்த்தினார். அவர் அங்கு உரையாற்றும் போது,

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிஞர்களை மதிக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற வகையிலும் அறிவைச் சுமந்தவர்களை வரவேற்கின்ற, கௌரவிக்கின்ற ஒரு பண்பாடு உருவாக வேண்டும் என்றவகையிலும், எமது அடுத்த தலைமுறையினருக்கு தங்களது அபிமானிகளாக, அடையாள புருஷர்களாக நடிகர்களையும் பாடகர்களையும் எடுக்கின்ற நிலை மாறி, அறிஞர்களை தங்களது வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளும் ஒரு முன்மாதிரி உருவாக வேண்டும் என்றவகையில்தான் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய விளம்பரம் கிடைக்க வேண்டும். முழு நாடும் இது பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அதற்கூடாக அடுத்த தலைமுறையினருக்கு இரண்டு முக்கியமான செய்திகளைக் கொடுக்க விரும்புகிறோம். அறிவு மற்றும் அறிஞர்கள் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஷரீஆ அறிவைப் பெற்ற உலமாக்கள் மதிக்கப்பட வேண்டும். எமது உலமாக்களைப் பற்றி ஒரு பிழையான மனப்பதிவு சமூகத்திலே இருக்கின்றது. உலமாக்கள் என்றால் வெறுமனே ஓதியவர்கள். அவர்கள் படித்தவர்கள் அல்ல. படித்தவர்கள் என்று ஒரு சாராரும் ஓதியவர்கள் என்றொரு சாராரும் வெவ்வேறாக இருக்கின்றனர். இந்தப் பார்வை உண்மையிலே பிழையானது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இத்தகையதொரு பாகுபாடில்லை. இந்நாட்டின் மூத்த ஷரீஆ அறிஞர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும், கல்வித்துறையில் மகத்தான பங்களிப்புச் செய்த பன்முக ஆளுமைகளாகவும் இருந்துள்ளனர்.

ஷரீஆத் துறை அறிஞர்கள் என்பவர்கள் பொதுக் கல்வியைப் பெறாதவர்கள், உலக விவகாரங்கள் தெரியாதவர்கள் என்ற மனப்பதிவு இருக்குமென்றால் உண்மையில் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே அறிவை நாம் இப்படிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். உலமாக்கலும் அறிஞர்கள், அவர்கள் அறிவை சுமந்தவர்கள், ஏனைய துறைகள் சார்ந்த புத்தி ஜீவிகள், துறைசார் நிபுணர்கள் மதிக்கத்தக்கவர்கள். எவே அனைவரும் இணைந்துதான் சமூகத்தில் மாற்றத்தைக்கொண்டுவர முடியும். இந்த ஒரு பணியை செய்யவேண்டும் என்பதற்காக, இதுபற்றியோரு விழிப்புணர்வு தேவை என்பதற்காகவே அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்துள்ளது.

உலகலாவிய மற்றும் இலங்கை முஸ்லிம்களின் பின்னடைவுக்கான காரணங்களை நாம் அடையாளப்படுத்தினால் இரு முக்கியமான காரணங்கள் முதன்மை பெறுகின்றது. எமக்கு மத்தியில் இருக்கின்ற முரண்பாடுகளும் அதன் விளைவாக தோன்றியுள்ள ஐக்கியமின்மையும். இது எமது முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கக்கூடியது. அடுத்து கல்வித்துறையில் பின்னடைந்த ஒரு சமூகமாக நாம் இருக்கின்றமை. இந்நிலைமை சர்வதேச, பிராந்திய, தேசிய மட்டத்திலும் தாக்கம் செலுத்துகின்றது. கல்வி வரலாற்றில் நாம் நூற்றாண்டு காலமாக பின்னடைந்தவர்களாக இருக்கின்றோம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் அறிவைப் புறக்கணித்த எமது சமூகம் தொடர்ந்தும் ஆங்கிலேயர் காலத்திலும் அறிவுக்கு உரிய இடத்தை வழங்கத் தவறிவிட்டது. அதற்கு சில காரணங்களும் இருந்தது உண்மைதான். நாம் ஒரு பக்கம் முரண்பட்டு, பிரிவுபட்டு மறுபக்கம் அறிவுத்துறைியில் முன்னேற்றம் காணத் தவறிய காரணத்தினால் மிகப்பெரிய பின்னடைவு கண்டுள்ளோம்.

இந்நாட்டில் முஸ்லிம்கள் என்றாலே வர்த்தக வாணிப சமூகம். இது ஒரு கண்ணோட்டத்தில் சரியாக இருந்தாலும் இது மாற்றப்பட வேண்டும். வரலாற்றில் முஸ்லிம்கள் வியாபார சமூகமாக திகழ்ந்திருக்கிறார்கள். 1875ஆம் ஆண்டிக் ஒரு கணக்கெடுப்பின் படி புறக்கோட்டையில் 80 கடைகளில் 73 கடைகள் முஸ்லிம்களுகஙகுச் சொந்தமானவையாக இருந்துள்ளது. ஏற்றுமதி எமது ஏகபோக உரிமையாக இருந்துள்ளது. 1911ஆம் இந்நாட்டில் 979 மாணிக்க வியாபாரிகளில் 866 பேர் முஸ்லிம்களாக இருந்துள்ளனர். 1900ஆம் ஆண்டுகளில் 849 நகை வியாபாரிகளில் 411 பேர் முஸ்லிம்கள். நாட்டிலுள்ள மொத்த சில்லரை புடவை வியாபாரங்களில் பெரும்பான்மையனவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர். ஆனால் இந்நிலைமை மாறியுள்ளது. இன்று 85 வீதமானோர் பொருட்களை வாங்கி விற்பவர்கள். உற்பத்தியிலோ, ஏற்றுமதியிலோ நாம் இல்லை. இந்நிலைக்கு நாம் சென்றமைக்கு இரண்டு பிரதானமான காரணங்களைக் குறிப்பிடலாம். அறிவுசார்ந்த வியாபாரமாக, பொருளாதாரமாக அமையவில்லை. பாரம்பரிய வியாபாரமாக காலம் கடந்த வியாபாரமாகவே இருந்தது. அடுத்து எமது பொருளாதாரம் விழுமியங்களை கொண்டதாக அமையவில்லை. அடுத்த தலைமுறையினர் வியாபார, வர்த்தக வாணிபத்துறையில் மிளிர வேண்டுமாயின், நாம் அறிவுசார், விழுமியம் சார் பொருளாதார வியடங்களில் கவனம் செலுத்த வேண்டும். எமது பின்னடைவுக்கான பிரதான காரணம் அறிவுத் துறையை புறக்கணித்தமையேயாகும்.

வாப்புச்சி மரிக்கார், சித்திலெப்பை,  ஏ.எம்.ஏ.அஸீஸ், ஒராபி பாஷா, ரீ.பி.ஜாயா, சேர் ராசிக் பரீட், ஐ.எல்.எம்.ஏ.அஸீஸ், பதியுதீன் மஹ்மூத் ஆகிய அனைவரும் கல்விக்கு பங்களிப்பு செய்த எமது முன்னோர்கள் நன்றியோடு நினைவுகூறத்தக்கவர்கள். இவர்களின் உழைப்பின் விளைவைத் தான் ஓரளவாகவது நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நளீம் ஹாஜியாரின் மறுமலர்ச்சி இயக்கம் கல்வித்துறையில் ஒரு பாய்ச்சளை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அனுமதிகளை அதிகரித்தது. இதுபோன்றதோர் கல்வி மறுமலர்ச்சி மீண்டும் அவசியமாகும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அத்தகையதோர் மறுமலர்ச்சிக்கான ஒரு விழிப்புணர்வையே ஆரம்பித்துள்ளது.

நம் சமூகத்துக்கு புத்திஜீவிகள், துறைசார் நியுணர்கள், ஷரீஆத் துறை அறிஞர்கள் தேவை என்றவகையில் நிறைய முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.  இவற்றுக்கு தேவையான நெறிப்படுத்தல்கள், ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கும் மார்க்கக் கடப்பாடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு இருக்கின்றது.

தலைநகர் வாழ் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்துக்காகவும் பல திட்டங்களை ஜம்இய்யா முன்னெடுத்துச் செல்கின்றது.

அல்லாஹ் கூறுகிறான், படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. எமது அறிவுத் தேடல், ஆய்வு, கண்டுபிடிப்பு அனைத்தும் படைத்த இறைவனின் பெயரால் அமைகிறபோதுதான் அது உண்மையான ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும். சுலைமான் (அலை) மிகப்பெரிய அறிஞராக இருந்தார்கள். பஞ்ச பூதங்கள் என்று நாம் கூறும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். அவர்கள் கூறினார்கள், இது எனது இறைவன் எனக்குச் செய்த மாபெரும் அருளாகும். நான் நன்றியுள்ள அடியானாக இருக்கின்றேனா? நன்றிகெட்டவனாக மாறுகின்றேனா? என்பதை சோதிப்பதற்காக எனது இறைவன் இந்த ஆற்றளை எனக்குத் தந்திருக்கின்றான். செல்வம், வாழ்வு, அறிவு என்பது அமானிதமாகும். இதற்குப் பதில்சொல்லியாகவேண்டும். ஈமானை அடிப்படையாக கொண்டே அறிவு அமைய வேண்டும் என்பது ஆழமாக கொடுக்கப்பட வேண்டும்.  படித்த அடுத்த தலைமுறையினர் தமது படிப்பை ஈமானின் அடிப்படையில், தீனின் அடிப்படையில் அமைத்துக்கொள்வது இன்றியமையாதது என்பதை உத்தரவாதப்படுத்தத் தவறும் பட்சத்தில் ஆன்மீகம், பண்பாடு பலவீனமடைந்த ஒரு சமுதாயமாக மாற்றமடைந்திருக்கும். அத்தகையதோர் தலைமுறையை நாம் உருவாக்கவேண்டிய தேவை இருக்காது.

பொதுக்கல்வியை கற்றவர்களுக்கு ஆன்மீகம் இல்லை. ஷரீயாக் கல்வி படித்தவர்களுக்கு ஆன்மீகம் இருக்கின்றது என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் அனைத்து துறையினரும் ஈமானின் அடிப்படையில் துறைசார் நிபுணர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஜமிய்யாவின் நோக்கமாகும் என்றார்.

We have 24 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player