Sheikhagar.org - Official site for sheikhagar

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது

Created On: Tuesday, 28 October 2008 11:51

Poor

mp3 Download Here 12.6 MB

புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.

உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.

புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.

உண்மையான சமவுடைமைக்கும் பூரண சமத்துவத்திற்குமான தெளிவான வெளிப்பாடாக நோன்பு இருக்கின்றது என்றால் அது மிகைப்படக் கூறியதாக அமையாது. அல்லாஹ் நோன்பை அறிமுகப்படுத்தி அனைவருக்குமான வரியாக விதித்துள்ளான். இந்த வரியை மாட மாளிகையில் வாழும் குபேரனும் செலுத்த வேண்டும். குடிசையில் வாழும் பாமர ஏழையும் கொடுக்க வேண்டும்.

 

Read more..

 

ஷெய்க் அகார் அவர்களுடனான ஒரு நேர்காணல் - மூலம் சமரசம்

Created On: Tuesday, 04 August 2009 19:46

 

சமரசம்: உங்கள் பின்புலம் பற்றிச் சொல்லுங்களேன்....!

அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: நான் 1960 இல் இலங்கையின் வடமேல் மாகாணத்திலுள்ள குருணாகல் மாவட்டத்தில் பிறந்தவன். எனது தாய்வழி மூதாதையர்களில் ஒரு சாரார் இந்தியாவின் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இந்திய தமிழ் நாட்டுடன் தொடர்புடையவர்கள். தந்தையின் பூர்வீகம் இலங்கைதான்.

ஆரம்பக் கல்வியை நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்திலுள்ள அரச பாடசாலையில் கற்றேன். பின்னர் உயர் கல்விக்காக 1976 இல் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய கலாநிலையமான ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்தேன். அங்கு ஏழு வருட கால இஸ்லாமிய கற்கை நெறியை பூர்த்தி செய்த அதே நேரம் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்தேன்.
1982 இல் விரிவுரையாளராக ஜாமிஆ நளீமிய்யாவுக்குச் சென்றேன். பின்னர் ஜாமிஆவின் கல்வித் துறைத் தலைவராகவும் கடந்த பல வருடங்களாக அதன் பிரதி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகின்றேன்.

Read more..

 

முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் கூட இல்லாத வசதிகளை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்.

Created On: Thursday, 16 July 2009 14:33

 Muslims of Sri Lanka

'முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் கூட இல்லாத வசதிகளை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர். எமது இளம் தலைமுறையினரை சரியான இஸ்லாமியப் பாதையில் நெறிப்படுத்துவதற்கான எல்லா வளங்களையும் களங்களையும் நாம் நிறைவாகப் பெற்றிருக்கின்றோம். இந்த நாட்டில் - 850 முஸ்லிம் பாடசாலைகள் - 2500 மஸ்ஜித்கள் -  200இற்கும் மேற்பட்ட அறபுக்கலாசாலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஹிப்ளு மத்ரஸாக்கள் - 1500 குர்ஆன் மத்ரஸாக்கள்  -  450 அகதியாப் பாடசாலைகள் என நிறைய நிறுவனங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றன.

இவ்வாறு ஜாமிஆ  நளீமிய்யா கலாபீட பிரதிப்பணிப்பாளர்  அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் குறிப்பிட்டார்.  

Read more..

   

ஸீறதுன் நபியின் சிறப்புப் பண்புகள்

Created On: Friday, 27 February 2009 07:53

 
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் தழுவிய வொன்றாக அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண்பார். இந்த வகையிலேயே கடந்த பல நூற்றாண்டு காலமாக பல நூறு ஆய்வாளர்கள் நபியவர்களின் பன்முக ஆளுமையை பல் வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்துள்ளதைப் பார்க்கின்றோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது.

  1. அது ஒரு திறந்த புத்தகமாக விளங்குகின்றது. நபிகளாரின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா தம்பதிகளின் திருமணம் முதல் நபியவர்களின் பிறப்பு, குழந்தைப் பருவம், இளமைக் காலம் உட்பட மேற் கொண்ட பயணங்கள் வரை அனைத்தம் மிகவும் துள்ளியமாக, ஆதாரபூர்வமாக பதியப்பட்டுள்ளன. இதனால் தான் சூரிய ஒளியில் பிறந்து வாழ்ந்த ஒரு வரலாற்றுப் புருஷர் என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு மேற்குலக வரலாற்றாசிரியர் வர்ணிக்கின்றார்.நபியவர்களின் உணவு, உடை, நடை, பாவனை அனைத்தும் மிக நுனுக்கமாக அவதானிக்கப்பட்டு வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Read more..

 

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு

Created On: Thursday, 19 February 2009 18:27

 

உலகில் நீண்ட நெடும் காலமாக ஆணாதிக்கமே நிலவி வருகின்றது. பெண்கள் மிக மோசமாக நசுக்கப்பட்டு வருகின்றனர் அவர்களில் அடிப்படை மனித உரிமைகள் கூட பல போது மறுக்கப்படுகின்றனளூ பெண்களை அடிமைப்படுத்தும் மனோபாவமே பெரும்பாலான ஆண்களிடம் மிகைத்து காணப்படுகின்றது. இவை எல்லாம் பெண்களின் விடுதலைக்காக குரலெழுப்புவோரின் சில மனக் குமுறல்கள். இவை நியாயமான மனக்குறைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த பெண் விடுதலைப் போராளிகள் பெண்களின் அவல நிலைக்கு இஸ்லாமும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறுவதைத் தான் எங்களால் புரிய முடியாமல் இருக்கின்றது. இவர்கள் இவ்வாறு இஸ்லாத்தைக் குற்றஞ் சாற்றுவதற்கும் அதன் மீது சேறு பூசுவதற்கும் மூன்றில் ஒன்று காரணமாக அமையலாம் எனத் தோன்றுகின்றது. அவையாவன:

  1.  இஸ்லாம் பற்றிய அறியாமை
  2.  இஸ்லாத்தின் மீதுள்ள பகைமையும் காற்புணர்ச்சியும்
  3.  முஸ்லிம்களிற் சிலர் இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்து அதனை ஆணாதிக்க மதமாகக் கொண்டு சமுதாயத்தில் செயற்படுகின்றமை

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அதன் வருகை முழுமனித சமுதாயத்திற்கும் ஓர் அருளாக அமைந்தது என்பதை மனித வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி பார்க்கின்ற எவரும் எளிதில் புரிந்து கொள்வார். இஸ்லாம் எல்லோருக்கும் அருளாக இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் அது பெண்ணினத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது ஒரு பெரிய உண்மையாகும். ரஸுலுல்லாஹ்வின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டார்.

Read more..

   

Page 60 of 61

<< Start < Prev 51 52 53 54 55 56 57 58 59 60 Next > End >>

We have 11 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player