Sheikhagar.org - Official site for sheikhagar

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு

Created On: Thursday, 19 February 2009 18:27

 

உலகில் நீண்ட நெடும் காலமாக ஆணாதிக்கமே நிலவி வருகின்றது. பெண்கள் மிக மோசமாக நசுக்கப்பட்டு வருகின்றனர் அவர்களில் அடிப்படை மனித உரிமைகள் கூட பல போது மறுக்கப்படுகின்றனளூ பெண்களை அடிமைப்படுத்தும் மனோபாவமே பெரும்பாலான ஆண்களிடம் மிகைத்து காணப்படுகின்றது. இவை எல்லாம் பெண்களின் விடுதலைக்காக குரலெழுப்புவோரின் சில மனக் குமுறல்கள். இவை நியாயமான மனக்குறைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த பெண் விடுதலைப் போராளிகள் பெண்களின் அவல நிலைக்கு இஸ்லாமும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறுவதைத் தான் எங்களால் புரிய முடியாமல் இருக்கின்றது. இவர்கள் இவ்வாறு இஸ்லாத்தைக் குற்றஞ் சாற்றுவதற்கும் அதன் மீது சேறு பூசுவதற்கும் மூன்றில் ஒன்று காரணமாக அமையலாம் எனத் தோன்றுகின்றது. அவையாவன:

  1.  இஸ்லாம் பற்றிய அறியாமை
  2.  இஸ்லாத்தின் மீதுள்ள பகைமையும் காற்புணர்ச்சியும்
  3.  முஸ்லிம்களிற் சிலர் இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்து அதனை ஆணாதிக்க மதமாகக் கொண்டு சமுதாயத்தில் செயற்படுகின்றமை

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அதன் வருகை முழுமனித சமுதாயத்திற்கும் ஓர் அருளாக அமைந்தது என்பதை மனித வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி பார்க்கின்ற எவரும் எளிதில் புரிந்து கொள்வார். இஸ்லாம் எல்லோருக்கும் அருளாக இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் அது பெண்ணினத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது ஒரு பெரிய உண்மையாகும். ரஸுலுல்லாஹ்வின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டார்.

Read more..

 

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு -ஓர் அறிமுகம்

Created On: Monday, 29 December 2008 14:00


இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டினை விளங்க முன் இஸ்லாத்துடன் தொடர்பான சில அடிப்படை உண்மைகளை புரிந்துக் கொள்வது இன்றியமையாததாகும். இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைத்திட்டம். அது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி நிற்கின்றது. அதனைக் கூறு போடுவதும், அதன் ஒரு பகுதியை புறக்கணித்து விட்டு மற்றொரு பகுதியை அமுல்நடாத்துவதும் பிழையானது மாத்திரமன்றி எதிர்பார்த்த வெற்றியையும் பெற முடியாமல் போய்விடும். இந்த வகையில் இஸ்லாத்தை முழுமையாக ஏற்று அதனை முழுமையாகச் செயல்படுத்துவது பிரதானமானதாகும்.

Read more..

 

புத்தாண்டுச் செய்தி

Created On: Monday, 29 December 2008 13:36


முஹர்ரம் புத்தாண்டு பிறந்துள்ளது. ஹிஜ்ரி 1429 கழிந்து 1430 துவங்கியுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் அவலங்களின் பட்டியல் நீண்டு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் புத்தாண்டு வருகை தந்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் விட கவலைக்குரிய விடயம் யாதெனில் முஹர்ரம் புதுவருடப் பிறப்பைப் பற்றியோ முஸ்லிம் உம்மத்தின் அவலங்கள் பற்றியோ எத்தகைய பிரக்ஞையுமின்றி எம் சமூகம் இருப்பதுதான்.

Read more..

   

கடன் அட்டை (Credit Card) பாவனை - பொருளியல் பார்வையும் ஷரீஆ நோக்கும்

Created On: Monday, 29 December 2008 14:10

வட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகப் பொருளாதாரம் எந்தளவுதூரம் உலக மக்களின் பொருளாதார வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வட்டி பூச்சிய நிலைக்குச் செல்லாதவரை உலகப் பொருளாதாரம் சீர்பெற முடியாது என்பது பொருளியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும். அதாவது வட்டி அமைப்பு முற்றாக ஒழிக்கப்படுவதன் ஊடாகவே உலகில் ஆரோக்கியமான ஒரு பொருளாதார ஒழுங்கு உருவாக முடியும் என்பதே உண்மையாகும். ஒரு பொருளியல் அறிஞர் வட்டியை 'வாழ்வின் எய்டஸ் என வர்ணித்துள்ளார். வட்டியானது பொருளாதாரம் எனும் உடலின் பலத்தைக் குன்றச் செய்து அழித்துவிடும் எய்ட்ஸாகவே இருக்கிறது. இதனையே அல்குர்ஆன், 'அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் எனக் கூறுகிறது.

வட்டி என்பது ஒரு வகையில் நவீன காலனித்துவமாகும். கடனின் கோரப் பிடியில் எவ்வாறு மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் நாளை பிறக்க இருக்கும் குழந்தையும் கூட பெருந்தொகைக் கடனுடன்தான் பிறக்கிறது. இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளால் செல்வந்த நாடுகளினதும், உலக நிதி நிறுவனங்களினதும் கடன்களை அடைக்க முடிவதில்லை. வருடா வருடம் குட்டிபோடும் வட்டியைக் கட்டுவதே இந்த நாடுகளுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. பழைய கடனை அடைப்பதற்கே பல நாடுகள் புதிய கடன் வாங்கும் அவலமும் உலகில் தொடர்கிறது. சிலபோது புதிதாகப் பெற்ற கடனால் பழைய கடனை அடைக்க முடிவதில்லை. மாறாக, அதற்கான வட்டியைச் செலுத்துவதில் குறித்த தொகை தீர்ந்து விடுகிறது. உதவி என்ற பெயரில் வழங்கும் இத்தகைய கடன்கள் மூலமே மூன்றாம் உலக நாடுகளில் செல்வந்த நாடுகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறுதான் வட்டி அமைப்பானது கலியுக காலனித்துவத்திற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

Read more..

 

இலங்கையில் இகாமத்துத் தீன் பணி

Created On: Tuesday, 30 December 2008 16:19

கேள்வி: இஸ்லாம் ஏனைய மதங்களைப் போல தனி மனித விவகாரங்களில் மாத்திரம் கவனத்தைக் குவிக்காது சமூகத்தை உருவாக்குகின்ற பணியையே வரலாறு நெடுகிலும் மேற்கொண்டு வந்துள்ளது. இது பற்றி விரிவாகக் கூற முடியுமா?

பதில்: பொதுவாக மதம் தனிமனிதன் பற்றியும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக அலசும். ஆன்மிகம் குறித்து விரிவாகப் பேசுவதுதான் மதம் என்று பொதுவாக மதம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. அதுதான் யதார்த்தமும்கூட.

இந்த வகையில் இஸ்லாமும் ஒரு மதமாக இருக்குமென்றால் தனிமனித வாழ்க்கையை மாத்திரம் கவனத்திற்கொண்டு செயற்படுவதாகவே அமைதல் வேண்டும். ஆனால் இஸ்லாம் இத்தகைய ஒரு மதமல்ல. இஸ்லாத்தை மதம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் பொதுவாக மதத்துக்கு வழங்கப்படுகின்ற வரைவிலக்கணத்துக்கு மாற்றமாக இஸ்லாத்தில் மூன்று பெரும் இலக்குகள் உண்டு அவை:

தனி மனித உருவாக்கம்
குடும்ப உருவாக்கம்
சமூக உருவாக்கம்


தனிமனிதர்களை உருவாக்கி தனி மனிதர்களைக் கொண்ட சில குடும்பங்களை அமைத்து, குடும்பங்களை இணைத்த ஒரு சமுதாயத்தை தோற்றுவிப்பதுதான் இஸ்லாத்தின் இலக்கு.

Read more..

   

Page 63 of 64

<< Start < Prev 61 62 63 64 Next > End >>

We have 93 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player