Sheikhagar.org - Official site for sheikhagar

நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை - 2

Created On: Tuesday, 09 June 2015 19:58

பகுதி- 02

அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இவர்கள் அறிவூட்டப்பட வேண்டும். இவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் விதிவிலக்கில்லாமல் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர், யுவதிகளை சரியான பாதையில் வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பிருக்கிறது. இதற்காக பாடநெறி உருவாக்கப்பட வேண்டும். உரைகள் மாத்திரம் போதாது. தரமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கூடாக இளைஞர், யுவதிகள் கட்டம் கட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் ஐந்து பேரில் ஒருவர் 60 வயதைக் கடந்த வயோதிபர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. இலங்கையிலுள்ள ஐந்து பேரில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்தாக National Institute of Mantel Health  விடுத்துள்ள அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இது ஒரு சாதாரண விடயமல்ல.

எமது நாட்டில் வருடாந்தம் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது மன அழுத்தத்தின் உச்ச நிலை.

 

Read more..

 

நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை

Created On: Tuesday, 19 May 2015 17:32

தொழுகை,நோன்பு, ஸகாத், ஹஜ் இவையெல்லம் (இபாதத்) கட்டாயக் கடமை என்பது எமக்குத் தெரியும்.ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது, தொழுவிப்பது, நல்லடக்கம் செய்வதும் இபாதத் என்பதை புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், திருமணமும் ஓர் இபாதத் என்பதை நாம் எந்தளவு தூரம் புரிந்து வைத்திருக்கின்றோம்? என்ற கேள்வியை நாம் அடிக்கடி எழுப்புவதுண்டு. பலபோது திருமணத்தை, திருமணத்தோடு தொடர்புபட்ட விடயங்களை, குடும்ப வாழ்க்கையை, குடும்ப வாழ்க்கையோடு தொடர்புபட்ட விடயங்களை இபாதத்தாக பார்க்கத் தவறி விடுகின்றோம். ஆனால், உண்மை என்னவெனில், திருமணம் என்பதும் ஓர் அமல், இபாதத்ளூ குடும்ப வாழ்க்கை என்பதும் ஓர் அமல், இபாதத். கணவன் மனைவிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, மனைவி கணவனுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, பெற்றோர் பிள்ளைகளுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, பிள்ளைகள் பெற்றோருக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது... இவ்வாறு குடும்ப வாழ்க்கையோடு தொடர்பான அனைத்தும் அம்சங்களும் இபாதத்களாக, நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய செயல்களாக எமது மார்க்கத்தில் கொள்ளப்படுகின்றன என்ற செய்தியை எமது சமூகத்துக்கு அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது என நான் கருதுகின்றேன்.

நிகாஹைப் பொறுத்தவரை இரு தரப்பினர் சம்பந்தப்படுகின்றனர். மணமகன் தரப்பு, மணமகள் தரப்பு. ஆண் தரப்பு,பெண் தரப்பு என்றும் சொல்லலாம். ஆனால், எல்லா விடயங்களிலும் போல் இங்கும் ஆண் தரப்பினரே செல்வாக்குச் செலுத்துவதை பார்க்கிறோம். நிகாஹ் மஜ்லிஸிலே கலந்து கொள்பவர்கள் ஆண்கள்ளூ ஈஜாப்-கபூலிலே வலி, ஷாஹித் என ஆண்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதையே பார்க்கிறோம். இதில் பெண்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

Read more..

 

தஃவா களத்தை அசிங்கப்படுத்தும் ஆன்மிக நோய்கள்

Created On: Saturday, 09 May 2015 15:56

இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுள் சிந்தனைச் சிக்கல் பிரதான இடத்தைப் பெறுகின்றது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மிகப் பாரதூரமானவை. சிந்தனைத் தெளிவின்மையின் விளைவாக முஸ்லிம் சமூகத்துக்குள் எதிரும் புதிருமான சிந்தனைப் பள்ளிகளும் முகாம்களும் தோன்றி முட்டி மோதும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்திற்கு வெளிச் சக்திகளால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை விட உள்வீட்டு முரண்பாடுகளால் உருவாகியுள்ள பாதிப்பு மிக மோசமாக மாறியள்ளது. இந்த முரண்பாடுகளால் ஷரீஆவின் குறிக்கோள்களும் இஸ்லாத்தின் நலன்களும் மிகப் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளன. மார்க்கத்தினால் கிடைக்கப் பெறும் பல நன்மைகளை சமூகம் அனுபவிக்க முடியாமல் போயுள்ளது.

கொள்கை முரண்பாடு என்ற மாயையின் விளைவாக பல்வேறு ஆன்மிக நோய்கள் தஃவாவின் பெயராலேயே பரவி வருகின்றன. மாற்றுக்கருத்துடையோரை விமர்சித்தல் என்ற பெயரில் தூற்றுதல், அவமதித்தல், அசிங்கப்படுத்துதல், பழி சுமத்துதல் முதலான பாவங்கள் அங்கீகரிக்கப்பட்ட தஃவா வழிமுறைகளாக மாறிவிட்டனவோ என நினைக்கத் தோன்றும் நிலை உருவாகியுள்ளது.

தஃவாக் களத்தில் நிலவும் போட்டி, பொறாமை காரணமாக காட்டிக் கொடுப்புக்களும் களுத்தறுப்புகளும் சகஜமாகி விட்டன. குழு வாதமும் இயக்க வெறியும் இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் ஈமானிய உறவையும் பலபோது மிகைத்து விடுகின்றன. மாற்றுக்கருத்துடையோர் தொடர்பில் நல்லெண்ணம் இல்லை, சுபமான பார்வை இல்லை. சுருக்கமாகச் சொல்வதாயின், மற்றவர்கள் மீது  சேறு பூசுவதையே வாடிக்கையாகக் கொண்ட பலர் தஃவாக் களத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தனிப்பட்ட அதிருப்திகளை, விருப்பு வெறுப்புக்களை, காழ்ப்புணர்ச்சிகளை கொட்டும் இடமாகவும் இன்று தஃவாக் களம் மாறியுள்ளது.

இத்தகையோர் மத்தியில் மிகவும் தூய்மையாகவும் பண்பாடாகவும் நடந்து கொள்ளும் ஒரு சாரார் இருப்பது மனதுக்கு ஆறுதலைத் தருகின்றது. இவர்கள் நாகரிகமானவர்கள், மாற்றுக் கருத்துடையோரை மதிப்பவர்கள், அவர்கள் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்கள், காழ்புணர்ச்சியற்றவர்கள். இவர்கள் தஃவாவின் பெயரால் பிறரை கிண்டல், கேலி செய்யாதவர்கள். முரண்பாட்டில் உடன்பாடு காண்பதே இவர்களின் நிலைப்பாடு. குறைந்தபட்சம் உடன்படும் விடயங்களில் ஒத்துழைக்கவும் முரண்படும் விடயங்களில் விட்டுக் கொடுக்கவும்  தெரிந்தவர்கள். இத்தகையவர்கள் எல்லா அணிகளிலும் இருக்கின்றார்கள்.

இன்றைய தேவை இவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதாகும். இவர்களின் அணுகுமுறையே தூய இஸ்லாமிய வழிமுறையாகும் என்பதை இஸ்லாத்தையும் ஸலபுகளின் வாழ்வையும் முறையாகப் படித்த எவரும் மறுக்கப்போவதில்லை. இந்த வகையில் இவர்களின் அணுகுமுறை களத்தில் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும். இதுவே தஃவா கலாசாரமாக மாற வேண்டும். தவறுகளை குத்திக் காட்டி உள்ளங்களைக் காயப்படுத்துவதை தவிர்த்து தவறுகளைக் காணும்போது அவற்றைப் பண்பாடாக சுட்டிக்காட்டி திருத்தும் இஸ்லாமிய மரபைப் பேணும் பண்பாட்டை மேலோங்கச் செய்வது காலத்தின் தேவையும் சனமார்க்கக் கடமையுமாகும்.

   

அரபு மத்ரஸாக்களின் கவனத்திற்கு

Created On: Wednesday, 06 May 2015 14:51

ஷரீஆக் கல்வியைக் கற்ற ஆலிம்களையும் சமூக,சன்மார்க்கப் பணியில் ஈடுபடும் தாஇகளையும் உருவாக்குகின்ற பொறுப்பு வாய்ந்த பர்ளு கிபாயாவை அரபு கலாசாலைகள் நிறைவேற்றிவருகின்றன.கல்வியின் குறிக்கோள் அறிவு,திறன்,மனப்பாங்கு,செயட்பாடு ஆகிய இலக்குகளை அடைவதாகும்.நமது மத்ரசாக்கள் குறித்த இலக்குகளை அடைவதில் ஒப்பீட்டு ரீதியில் வெற்றி கண்டுள்ளன என்றே கூறல் வேண்டும்.ஆயினும் சமகால சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் வகையில் எமது மத்ரஸாக்களின் தரத்தையும் அடைவு மட்டத்தையும் மேம்படுத்துதல் இன்றியமையாததாகும்.இந்நிலையை உணர்ந்து பல மத்ரஸாக்கள் கடந்த காலங்களில் தமது கல்விக் கொள்கையிலும் கலைத்திட்டத்தலும் காத்திரமான மாற்றங்களைச் செய்துள்ளதை இங்கு குறிப்படாமல் இருக்க முடியாது.இந்த வகையில் பல மத்ரசாக்கள் தமது மாணவர்களைத் தகுதி படுத்தும் நோக்கத்துடன் அவர்களை க.பொ.த சாதாரண,உயர் தர பரீட்சைகளுக்கும்  தயார்படுத்துவது காலத்தின் தேவையைக் கவனத்திற் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு காத்திரமான முன்னெடுப்பாகும்.

மேலும் தற்போது ஆலிம்களில் கணிசமான தொகையினர் பட்டப் படிப்பை பூர்த்தி செய்பவர்களாகவும் பட்டப் பின் படிப்பை மேற்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.இவை பாராட்டத்தக்க முன்னெடுப்பக்களும் முன்னேற்றங்களுமாகும்.ஆயினும் பட்ட,பட்டப் பின் படிப்புகள் வெறுமனே சான்றிதழையும் தொழிலையும் பணத்தையும் இலக்காக் கொண்டு அமைந்து விடக் கூடாது.மாறாக சமகால சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து,அல்லாஹ்வின் தீனை மேலோங்கச் செய்வதற்கு குறித்த பொதுக் கல்வி துணை புரிதல் வேண்டும்.இல்லாத போது அக்கல்வி ஷரீஆ துறைக்கு சாவு மணியடிக்கும் ஒன்றாக மாறும் ஆபத்து உண்டு என்பதையும் இங்கு ஈண்டு குறிப்பிட விரும்பிகின்றேன்.அவ்வாறே எல்லா வகையான அறிவும் அல்லாஹ்வின் பாட்பட்டதாகவும் புனிதமானதாகவும் கொள்ளப்பட்டாலும் ஒப்பீட்டு ரீதியில் படைப்புகள் பற்றிய அறிவை விட படைப்பாளன் பற்றிய அறிவு மிகவும் புனிதமானது என்ற வகையில் ஷரீஆ அறிவின் புனிதத்துவத்தை அனைவரும் ஆழமாகப் புரிந்திருத்தல் வேண்டும்.

உலகில் இருவகைத்துறைகள் உண்டு.அதில் ஒருவகை தொழில் சார் துறையாகும்.மற்றையது சேவை சார் துறையாகும்.ஷரீஆத்துறை இரண்டாம் வகையைச் சார்ந்தாகும்.இது வெறும் சேவை மாத்தரமல்ல மிகப்புனிதமான சேவையாகும்,நுபூவ்வத்தினதும் ரிஸாலத்தினதும் பின் புலத்தைக் கொண்ட பணியுமாகும் என்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

 

அமைதியான வாழ்வு - குத்பா

Created On: Tuesday, 24 March 2015 17:18

audio Download Here

   

Page 18 of 63

<< Start < Prev 11 12 13 14 15 16 17 18 19 20 Next > End >>

We have 25 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player