வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்

Article Index
வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
பெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்
நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்
மதி வெளிப்படல்
ஸ்கலிதமும் குளிப்பும்
அதானுக்குப் பதில் கூறல்
கழாத் தொழுகை
தொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்
தொழுகையில் குனூத்
தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்
தஹஜ்ஜுத்துடைய நேரம்
ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை
ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
குத்பாவின் போது தொழுதல்
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்
குல்லதைன்
துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
ஸக்காத்தும் காலதாமதமும்
ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
நோன்பைக் கழாச் செய்தல்
சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
மஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்
அகீகா
மிருகங்களின் மலசலம்
அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
All Pages


அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்

கேள்வி: அல்குர்ஆனை ஓதி அதற்குக் கூலி வாங்க அனுமதி உண்டா? பூரண விளக்கம் தேவை.

பதில்: 'கூலிக்குக் குர்ஆனை ஓதுவதனால் இறந்தவருக்கோ அல்லது ஓதுபவருக்கோ எத்தகைய நன்மையும் கிட்ட முடியாது' என்கிறார்கள் ஹனபி மத்ஹபுடைய இமாம்கள். இதனை மஹ்மூத் இப்னு அஹ்மத் (ரஹ்) தனது 'ஷர்ஹுத் திராயா' வில் குறிப்பிடுகின்றார்.

இது பற்றிக் கூற வந்த இமாம் அல்-அய்னி (ரஹ்), 'கூலி எடுப்பவரும் கொடுப்பவரும் இருவருமே பாவிகள் என்றும் இன்று எம்மத்தியில் பரவலாக உள்ள, அல்குர்ஆனைக் கூலிக்கு ஓதும் முறையானது ஆகுமான ஒன்றல்ல என்றும் குறிப்பிடுகின்றார்.' (பார்க்க: பிதாயா ஷர்ஹுல் ஹிதாயா)

'இவ்வமைப்பு இஸ்லாத்தின் எந்தவொரு மத்ஹபிலும் அனுமதிக்கப்பட்டதில்லை. எந்தவொரு இறை மார்க்கத்திலும் (உம்: தவ்றாத், இன்ஜீல்) அனுமதிக்கப்பட்டதுமல்ல, இதனால் எத்தகைய ஸவாபும் கிடைக்காது' என்கிறார் இமாம் முஹம்மத் அல் பரகவி (பார்க்க: மஜ்மூஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)

அல்குர்ஆன் ஓத எவரையும் கூலிக்கு அமர்த்தி, ஓதியதை இறந்தவர்க்குச் சேர்ப்பிப்பது செல்லுபடியாகாது. இதற்கு எந்தவொரு இமாமும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. உலமாக்களின் கருத்துயாதெனில், 'ஒருவர் பணத்திற்காக அல்குர்ஆனை ஓதினால் அவருக்கு எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இப்படியிருக்க இறந்தவருக்கு இவர் எதனைக் கொடுக்கப் போகிறார்! உண்மையில் மரணித்தவரை அடைவதெல்லாம் நற்கருமங்களே ஆகும். அல்குர்ஆனை ஓதக் கூலிக்கு ஆளை அமர்த்;;துவதையிட்டு எந்தவொரு இமாமும் கூறியதில்லை' என்கிறார் இப்னு தைமியா (பார்க்க: மஜ்முஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)

குறித்த அமைப்பு ஹராமானது என்பதற்கு அறிஞர்கள் கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டுவர்.

'எனது வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்' (241) இவ்வசனத்திற்கு அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் 'அல்குர்ஆனுக்கு கூலி எடுக்காதீர்கள்' எனப் பொருள் கொடுக்;கிறார்கள். (பார்க்க தப்ஸீர் அத்தபரீ, இப்னு கதீர், அல்குர்துபி )

இறுதியாக இதுபற்றி 'ஷர்ஹு அகீதத்தித் தஹாவிய்யா' எனும் நூலில் இடம்றெ;றுள்ள கருத்தை கீழே தருகின்றோம்.

'சிலரைக் கூலிக்கமர்த்தி அல்குர்ஆனை ஓத வைத்து, அதனை இறந்தவருக்கு அன்பளிப்புச் செய்யும் அமைப்பை ஸலபுஸ்ஸாலிஹீன்கள் எவரும் செய்ததில்லை, இமாம்கள் எவரும் இதனை ஏவியதாகவும் இல்லை. இது விடயத்தில் அவர்களில் எவரும் சலுகை வழங்கியதாகவும் தெரியவில்லை. அல்குர்ஆனை ஓதுவதற்காகவே கூலிக்கு அமர்த்துவது கூடாத ஒன்றாகும்' என்பதில் கருத்து வேறுபாடில்லை.We have 13 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player