சிந்தனைகள்

Article Index
சிந்தனைகள்
அல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்
பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி
ஹஜ் புகட்டும் படிப்பினைகள்
இஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்
இளைய தலைமுறையும், இஸ்லாத்தின் வழிகாட்டலும்.
தஃவாவும் சகோதர இனத்தவர்களும்
நவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்
All Pages

அல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்

ஒரு குழந்தையின் ஆரம்ப கல்வியாக அல்குர்ஆனிய்ய கல்வி அமைதல் வேண்டும் என்பதுமுஸ்;லிம் கல்வியியலாளரின் உறுதியான கருத்தாகும். ஒரு குழந்தை கற்றலுக்கான தயா நிலையை அடைந்து விட்டால் அதற்கு ஆரம்பமாக அல்குர்ஆனை கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்தை பல் துறைசார் அறிஞர் இப்னு ஸீனாவும் சமூகவியல் அறிஞர் இப்னு கல்தூனும் வலியுறுத்துகின்றனர்.

அல்குர்ஆனை கற்றல் எனும் போது வெறுமனே கிளிப்பிள்ளையைப் போன்று அதனை ஓதக் கற்றுக் கொள்வது மட்டும் போதுமானதல்ல. அதனை திருத்தமாக ஓதக் கற்றுக் கொள்வது அவசியமாக இருப்பது போலவே அதன் போதனைகளை விளங்கவும் குழந்தைகள் வழிப்படுத்தப்பட வேண்டும். அல்குர்ஆனுடன் சிறார்களுக்கு உயிரோட்டமானதோர் உறவு ஆரம்ப முதலே வளர்க்கப்பட வேண்டும். இதற்கு துணை புரியும் வகையில் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் கலைத்திட்டம் அமைந்திருத்தல் வேண்டும்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் எண்ணிக்கையில் பெருந்தொகையான அல்குர்ஆன் மத்ரஸாக்கள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள போதிலும் அவற்றின் தரம் திருப்திகரமானதாக இல்லை என்ற கசப்பான உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. அறபு மத்ரஸாக்களின் இவ்வவல நிலைக்கான காரணங்கள் பல. சமூகத்தில் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த முக்கியத்துவம், முறையான பாடத்திட்டம் இல்லாமை, ஆசிரியர்கள் பயிற்று விக்கப்படாமை, மாணவர்களின் தொகைக்கேற்ப ஆசிரியர்களின் தொகை இல்லாமை இவற்றுள் குறிப்பிடத்தக்க காரணங்களாகும்.


பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி


மனித இன வரலாற்றில் பல சமூகங்கள் தோன்றி மறைந்துள்ளன, பல நாகரிகங்கள் உருவாகி அழிந்துள்ளன. இவற்றின் எழுச்சிக்கு துணைநின்ற காரணிகளையும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த அம்சங்களையும் ஆராயும்போது ஒரு முக்கிய உண்மை புலனாகிறது. ஒரு சமூகம் அதற்கேயுரிய ஒழுக்க விழுமியங்களிலும் பண்பாடுகளிலும் நிலைத்து நின்றபோது அந்த சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது. வளமுடன் விளங்குகின்றது. உலக நாகரிகத்திற்கு தனது உன்னத பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றது. ஆனால் அச்சமூகம் தனது ஒழுக்க மாண்புகளையும் தான் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளையும் கைவிடுகின்ற போது அது படிப்படியாக வீழ்ச்சியடைந்து அடையாளம் தெரியாமல் மறைந்து விடுகின்றது. இதுவே வரலாறு கூறும் அந்தப் பாரிய உண்மை.

முஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரலாற்று நியதி பொருந்தும். முஸ்லிம்களின் வரலாறு இதற்கு சான்று பகர்கின்றது. முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திலும் அதன் உயரிய பண்பாடுகளிலும் குணவொழுக் கங்களிலும் உறுதியாக நின்ற காலத்தில் அது ஓர் உலகளாவிய சாம்ராஜ்யத்திற்கு பாத்தியதையுடையதாக விளங்கியது. ஆனால் என்று அதன் பண்பாடுகளில் பலவீனம் தோன்ற ஆரம்பித்ததோ அன்று அதன் வீழ்ச்சியும் தொடங்கியது. இன்றுவரை அவ்வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியவில்லை. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் முஸ்லிம் சமூகம் இன்னும் இந்த அடிப்படை கோளாரை சரியாக இனங்கண்டு கொண்டதாக இல்லை என்பதுதான். இதனால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கான முயற்சிகளிலும் இவ்வம்சம் உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் பெறாமல் இருந்து வருகின்றது.

இன்று நாம் உலகளாவிய ஓர் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் காண்பது உண்மை. ஆனால் இங்கு அஹ்காம் எனும் சட்டங்களைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி அக்லாக் எனும் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பதில் உருவாகியுள்ளதாக தெரியவில்லை. தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் முதலான கடமைகளுடன் தொடர்புடைய அஹ்காம்களை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு அவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய அக்லாக்களைப் பற்றி நாம் கரிசனை கொள்வதில்லை.

இதனால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப உறவுகளிலும், சமூகத் தொடர்புகளிலும் பேணப்பட வேண்டிய பண்புகள் பல புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் பண்பாட்டுப் பயிற்சிகளைப் பெறாத நிலையில் வளர்ந்து வருகின்றனர். வீடு, பாடசாலை, மஸ்ஜித், வீதி முதலான இடங்களில் எவ்வாறு நடந்துகொள்வது என்பதைக்கூட தெரியாத நிலையில் சமூகத்தில் பலர் இருந்து வருகின்றனர். ஒரு காலத்தில் முழு உலகிற்கும் பண்பாட்டை, நாகரிகத்தை வழங்கிய ஒரு சமூகத்தின் நிலை இன்று இவ்வாறு மாறியுள்ளமை எவ்வளவு கவலைக்குரியது?! நம்பிக்கை, நாணயம், வாய்மை, வாக்கு மாறாமை, நேரந்தவறாமை, ஒழுங்கு, கட்டுப்பாடு, பிறர் நலன் பேணல் போன்ற உயரிய இஸ்லாமிய குணப் பண்புகள் எம்மை விட்டு விடைபெற்று சென்றுவிடுமோ என நினைக்கத் தோன்றுகின்றது. எமது சமூகத்தின் தனி மனிதர்களின் ஒழுங்கற்ற நடத்தைகள் முழு சமூகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தி வருகின்றன.
      எனவே, இன்று எமது சமூகத்தில் ஒரு பண்பாட்டுப் புரட்சியையே செய்ய வேண்டியுள்ளது. இத்துறையில் ஒரு பாரிய பிரசார முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எமது தஃவாக் களங்களை, குறித்த இவ்வம்சத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்த முயல்வது இன்றைய காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும். இல்லாதபோது எம் சமூகத்தின் வீழ்ச்சியை - அல்லாஹ் நாடினால் அன்றி, - எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விடும்.


ஹஜ் புகட்டும் படிப்பினைகள்


புனித ஹஜ்ஜுடைய காலமிது. உலகின் எட்டுத் திக்குகளிலுமிருந்து இலட்சோப லட்சம் மக்கள் இன, நிற, மொழி, பிரதேச பேதங்களை மறந்து இஸ்லாத்தின் ஐந்தாம் பெருங் கடமையை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பம் இது. வருடா வருடம் சமுதாயத்தின் ஒற்றுமையை அழகாக வெளிக்காட்டும் இவ்வாறான ஒரு மாபெரும் சனக்கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காண்பதரிது.

முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜின் போது எம்மத்தியிலுள்ள மத்ஹப் வேறுபாடுகளையோ, தரீக்கா, ஜமாஅத் முரண்பாடுகளையோ, பிற பேதங்களையோ பொருட்படுத்துவதில்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற உணர்வு ஓங்கி நிற்க அல்லாஹ்வின் அழைப்பையேற்று அவனது திருப்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கில், லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற கோஷத்தை ஒருமித்து முழங்கியவர்களாக அனைத்து கிரியைகளிலும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக ஈடுபடுகின்றோம்.

ஹஜ்ஜில் நாம் காணும் இந்த ஒற்றுமையும் உடன்பாடும் ஹஜ்ஜுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியுமா? அவ்வாறாயின் அதன் மூலம் நாம் பெறும் பயிற்சிகள் படிப்பினைகள் அர்த்தமற்றவையாகி விடுமல்லவா?

மேலும் புனித ஹஜ்ஜுடைய காலம் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தன்னிகரற்ற தியாகங்களை எமது நினைவுக்குக் கொண்டுவருகின்றது. சத்தியத்தை உலகில் நிலைநாட்டுவதற்காகவும் இறை திருப்தியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அன்னார் மேற்கொண்ட தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.

முஸ்லிம் உம்மத் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டங்களிலும் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் இன்று இருக்கின்றது. உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகியுள்ள ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. உலகின் எல்லா சக்திகளும் இஸ்லாத்திற்கு எதிராக தம்மத்தியில் வேறுபாடுகளை மறந்து கைகோர்த்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இத்தகையதொரு நிலையில் எமது விடுதலைக்கும் வெற்றிக்கும் வழியமைக்கும் காரணிகள் இரண்டே இரண்டுதான்.
அவை:
(அ) ஒற்றுமை (ஆ) தியாகம்


ஹஜ் ஒன்றே எமக்கு இவ்விரு பாடங்களையும் கற்றுத்தரப் போதுமானது.

எனவே, எம்மத்தியில் ஒற்றுமை, ஐக்கியம், புரிந்துணர்வு, நல்லுறவு முதலான பண்புகளை வளர்ப்பதற்கு ஹஜ்ஜுடைய காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள நாம் முனைதல் வேண்டும். அர்ப்பணத்துடனும் தியாக சிந்தையுடனும் சன்மார்க்க, சமூக நலன்களுக்காக உழைக்கும் மனப்பாங்கை உருவாக்கவும் முயற்சி செய்தல் வேண்டும். உலமாக்கள், கதீப்மார்கள், தாஇகள் தமது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இக்காலத்தில் இவ்விடயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்பது எமது கருத்து.

ஆகவே, ஹஜ்ஜை, ஹஜ்ஜுடைய காலத்தை, தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளவையாக ஆக்கிக்கொள்ளத் திடசங்கற்பம் பூணுவோம், ஒற்றுமைப்படுவோம், அர்ப்பணத்துடன் செயற்படுவோம், வெற்றி நிச்சயம்.

''அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இருக்கின்றது''
(ஸூரா அல் பகரா: 214)


இஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்


கடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.

மேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழி;ல் நுட்ப முன்னேற்றத் தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.

இந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன? இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்?

Internet உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.

ஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது? அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது? எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்?

இன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.

தொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. காதியாணிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.

இஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.

நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் - ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது - இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.

''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! ஆன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''
(ஸூறா 16:125)


இளைய தலைமுறையும், இஸ்லாத்தின் வழிகாட்டலும்.

இளமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும் (Childhood) முழு வளர்ச்சிப்பருவத்திற்கும் (Fullmanhood) இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் (physical strength and energy) கொண்ட பருவமாகும்;; வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்றிறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்வுக்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிமொழி வழிகாட்டி நிற்கின்றது.

பருவ வயது என்பது முற்றிலும் நல்ல பருவமல்ல. கெட்ட மோசமான பருவமுமல்ல. இளமையென்பது வாளைப் போன்றது. அதனைப் போர் வீரனும் பயன்படுத்தலாம்; கொள்ளைக்காரனும் பயன்படுத்த முடியும். மனித இன வரலாற்றில் ஆக்கப் பணிகளில் முன்னின்று உழைத்த பெருமை அதிகம் இளைஞர்களையே சாரும். அதேவேளை உலகில் நாசவேலைகளுக்கும், அழிவு வேலைகளுக்கும் அவர்களே துணை நிற்பதையும் காணலாம்.

ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர்களில் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது. தனது இளைஞர் பரம்பரையை சரியாகப் பயிற்றுவித்து, முறையாக நெறிப்படுத்தி, வழிப்படுத்திய ஒரு சமூகமே எழுச்சி பெற முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து விடும். இவ்வகையில் இஸ்லாம் இளமையின் முக்கியத்துவத்தை பக்குவப்படுத்தி அதன் மூலம் பயன் பெறுமாறு வலியுறுத்துகின்றது. முன்மாதிரியான ஓர் இளைஞனுக்கு உதாரணமாக அல்-குர்ஆன் நபி யூஸுபைக் குறிப்பிடுகின்றது. அவரின் ஆளுமைப் பண்புகளையும் அவர் பெற்றிருந்த திறன்களையும் தருகின்றது. அடையாளப் புருஷர்களாகக் கொள்ளத்தக்க ஓர் இளைஞர் குழுவைப் பற்றி அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் விளக்குகின்றது.

''..நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள்; அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள்;. மேலும் நேர்வழியை அவர்களுக்கு நாம் அதிகப்படுத்தினோம். மேலும், (அக்கால அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன்தான் எங்கள் இரட்சகன் அவனையன்றி வணக்கத்திற்குறிய வேறு நாயனை நாம் அழைக்க மாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) அப்போது உண்மையில் நாம் வரம்பு மீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறிய போது, அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்தி விட்டோம்.''

நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிக்குத் தோள் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களாகவே இருந்தனர். இஸ்லாமிய வரலாற்றில் ஸ்பெயினைக் கைப்பற்றிய தாரிக் பின் ஸியாதும், இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஹம்மத் பின் காஸிமும் இளம் வாலிபர்களே.

ஆனால், இன்றைய முஸ்லிம் உம்மாவைப் பொறுத்த வரையில் அதன் இளைய தலைமுறையினரின் நிலை பெரிதும் கவலைக்கிடமானதாகக் காணப்படுகின்றது. மேற்கத்தேய, சடவாத, உலகாயத கலாசாரத்தின் படையெடுப்புக்களுக்கு முன்னால் எமது இளைஞர்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். சிற்றின்பங்களும் அற்ப உலகாயத அடைவுகளுமே இவர்களில் பெரும்பான்மையானோரின் இலக்குகளாக இருக்கின்றன. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாமல் தம் மீதுள்ள பொறுப்புக்களை உணராமல் தான்தோன்றித்தனமாக வாழும் வாலிபர்களையே எங்கும் காண முடிகின்றது. இளைஞர் சமூகத்தின் இவ்வீழ்ச்சி நிலையின் பயங்கர விளைவை உலகளாவிய முஸ்லிம் உம்மா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

எனவே இன்றைய சமூகப் புனர்நிர்மாண சீர்திருத்தப் பணியிலும் பிரச்சாரப் பணியிலும் இளைஞர் விவகாரம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற வேண்டியது அத்தியவசியமாகும். அதிலும் இளைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க வாழ்வை ஒழுங்குபடுத்துவது பிரதான இடத்தைப் பெறல் வேண்டும். இன்றைய இளைஞர்களின் இருப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சினை ஒழுக்கச் சீர்கேடுகளே என்பதை அறியாதோர் இருக்க முடியாது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களின் பிரச்சினைகள் உரிய இடத்தைப் பெறாமை கவலைக்குரியதாகும்.


 தஃவாவும் சகோதர இனத்தவர்களும்


இலங்கையில் இஸ்லாமிய தஃவாவுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் காலடிவைத்த நாள் முதல் இஸ்லாமிய தஃவாவும் காலத்துக்குக் காலம் பல்வேறு அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஒரு காலத்தில் இங்கு உலமாக்கள், ஷைகுகள் என்றிருந்த தனி மனிதர்கள் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தரீக்காக்கள் எனப்படும் ஆன்மீக அமைப்புக்கள் மூலமாகவும் நல்ல பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக - உலகின் ஏனைய பாகங்களில் போலவே - இஸ்லாமியப் பிரசாரப்; பணியில் இயக்கங்கள் - ஜமாஅத்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை முனைப்புடன் செயற்பட்டும் வருகின்றன. அவற்றின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. தொடர வேண்டியவை.

ஆயினும் இலங்கை தஃவாக்களத்தில் நாம் காணும் ஒரு பெரும் குறை உண்டு. அதுவே பிற சமூகத்தவர்களுக்கும் சமயத்தவர்களுக்கும் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் சொல்வதில் நாம் கடைப்பிடித்து வந்துள்ள எதிர்மறையான நிலைப்பாடாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் சன்மார்க்கப் பணியில் ஈடுபடும் எத்தனையோ அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் இந்நாட்டில் எம்மோடு வாழும் பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு காத்திரமான முயற்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அத்தகைய பணிகள் மிகவும் அரிதாகவும் குறைவாகவுமே நடைபெறுகின்றன. இதன் பாதகமான விளைவுகளை மறுமைக்கு முன்னர் உலகிலேயே தற்போது நாம் அநுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் அந்நிய சமூகத்தவர்கள் மிகவும் பிழையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளும் சில விஷமிகளும் மேலும் துர்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

எனவே நாம் விட்ட தவறை உணர்ந்து கடமையை அவசரமாக செய்வதற்கு உடன் முன்வரவேண்டிய காலமிது. ஆயினும் இப் பணியை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு தூரம் எம்மை நாம் தயார்படுத்திக் கொண்டுள்ளோம் என்பது கேள்விக் குறியாகும். ஆழமான சன்மார்க்க அறிவும் பிற சமயங்கள் பற்றிய தெளிவும் மொழியறிவும் இப்பணிக்கு அடிப்படையாகத் தேவைப்படுபவை. குறைந்த பட்சம் இத்தகுதியைப் பெற்ற ஒரு குழுவையாயினும் உருவாக்கும் பொறுப்பு நமக்குண்டு.

இக்கடமையை நாம் காலதாமதமின்றி நிறைவேற்றியாக வேண்டும் இல்லாதபோது பாரதூரமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது குற்றங்களை மன்னித்து எம்மை ஈருலகிலும் பாதுகாப்பானாக.


 நவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்


கடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.

மேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழி;ல் நுட்ப முன்னேற்றத்தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.

இந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன? இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்?

Internet  உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை; அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.

ஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது? அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது? எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்?

இன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.

தொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. காதியானிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.

இஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.

நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காகச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும்- ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது- இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.

''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! ஆன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''(ஸூறா 16:125)

We have 22 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player