சிந்தனைகள் - அல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்

Article Index
சிந்தனைகள்
அல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்
பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி
ஹஜ் புகட்டும் படிப்பினைகள்
இஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்
இளைய தலைமுறையும், இஸ்லாத்தின் வழிகாட்டலும்.
தஃவாவும் சகோதர இனத்தவர்களும்
நவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்
All Pages

அல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்

ஒரு குழந்தையின் ஆரம்ப கல்வியாக அல்குர்ஆனிய்ய கல்வி அமைதல் வேண்டும் என்பதுமுஸ்;லிம் கல்வியியலாளரின் உறுதியான கருத்தாகும். ஒரு குழந்தை கற்றலுக்கான தயா நிலையை அடைந்து விட்டால் அதற்கு ஆரம்பமாக அல்குர்ஆனை கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்தை பல் துறைசார் அறிஞர் இப்னு ஸீனாவும் சமூகவியல் அறிஞர் இப்னு கல்தூனும் வலியுறுத்துகின்றனர்.

அல்குர்ஆனை கற்றல் எனும் போது வெறுமனே கிளிப்பிள்ளையைப் போன்று அதனை ஓதக் கற்றுக் கொள்வது மட்டும் போதுமானதல்ல. அதனை திருத்தமாக ஓதக் கற்றுக் கொள்வது அவசியமாக இருப்பது போலவே அதன் போதனைகளை விளங்கவும் குழந்தைகள் வழிப்படுத்தப்பட வேண்டும். அல்குர்ஆனுடன் சிறார்களுக்கு உயிரோட்டமானதோர் உறவு ஆரம்ப முதலே வளர்க்கப்பட வேண்டும். இதற்கு துணை புரியும் வகையில் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் கலைத்திட்டம் அமைந்திருத்தல் வேண்டும்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் எண்ணிக்கையில் பெருந்தொகையான அல்குர்ஆன் மத்ரஸாக்கள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள போதிலும் அவற்றின் தரம் திருப்திகரமானதாக இல்லை என்ற கசப்பான உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. அறபு மத்ரஸாக்களின் இவ்வவல நிலைக்கான காரணங்கள் பல. சமூகத்தில் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த முக்கியத்துவம், முறையான பாடத்திட்டம் இல்லாமை, ஆசிரியர்கள் பயிற்று விக்கப்படாமை, மாணவர்களின் தொகைக்கேற்ப ஆசிரியர்களின் தொகை இல்லாமை இவற்றுள் குறிப்பிடத்தக்க காரணங்களாகும்.We have 21 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player